கமலுக்கு கொரோனா.. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இந்த நடிகரா? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகர் ஒருவர் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
Recommended Video
விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாதத்தில் தொடங்கி ஜனவரியில் நிறைவடைந்தது.

அக்டோபரில் தொடங்கியது
சில நாட்கள் தாமதம் ஆனதுமே பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என கேட்டு ரசிகர்கள் நச்சரிக்க தொடங்கி விட்டனர். இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போலவே அக்டோபரில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஜனவரியில் நிறைவடைய உள்ளது.

தொகுத்து வழங்கும் கமல்
கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன்தான் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி வார இறுதி நாட்களில் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்து வாரம் முழுக்க நடந்த சம்பவங்களை விவாதித்து வருகிறார்.

பிக்பாஸில் பங்கேற்பு
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், கடந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கு தனது கதர் பிராண்டை அறிமுகப்படுத்திய நடிகர் கமல்ஹாசன் அடுத்த ஓரிரு நாட்களிலேயே திரும்பினார். அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கொரோனா தொற்று உறுதி
கமல்ஹாசன் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை ஷூட் செய்யப்பட்டது. இந்நிலையில் இருமலால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனை அறிக்கை
இதனை தொடர்ந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு லேசான காய்ச்சலும், சுவாச பாதையில் தொற்றும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொகுத்து வழங்கப்போவது யார்?
இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை வரும் வாரங்களில் யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி?
அதன்படி வரும் வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. கமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெறுவது சந்தேகம் என கூறப்படுகிறது. இதனால் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஓய்வு கிடைக்கும் பட்சத்தில் அவர் தொகுத்து வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு?
விஜய் சேதுபதியால் நேரம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டால் நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை சிம்புதான் தொகுத்து வழங்குவார் என பிக்பாஸ் சீசன் 4 முடிந்ததுமே தகவல் பரவியது.

அடுத்த சீசன்களுக்கு ஒத்திகையாக?
ஆனால் கடைசியில் அது வதந்தி என்றும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்குவார் என்றும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த சீசன்களுக்கு ஒத்திகையாக கமல் வரும் வரை தற்காலிகமாக சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடமை தவறியதே இல்லை
பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் யார் இந்த வாரம் தொகுத்து வழங்கப்போகிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல், தான் கடமை தவறியதே இல்லை, வெளியூர் சென்றாலும் வேலைக்கு கரெக்ட்டாக வந்துவிடுவேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











