Just In
- 13 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 14 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 15 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 15 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுத்தது யாரு? ஆரியா, அனிதாவா.. ஏன்னா இவங்க திறமையான போட்டியாளர்களை தானே வெளியே அனுப்புவாங்க?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து அர்ச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்து யார் வெளியேறுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
70 நாளுக்கு பிறகு ஒருத்தன் எட்டிப் பார்த்தான் என்பதற்காக எல்லாம் ஆஜீத்தை சேவ் செய்வது நியாயமே இல்லை என பிக் பாஸ் நிகழ்ச்சி மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், அடுத்தது ஆரி அல்லது அனிதா இவர்களில் ஒருவரைத் தான் வெளியே அனுப்புவாங்க என்றும் செம போடு போட்டு வருகின்றனர்.
மை பாஸி குமாரு இஸ் பேக்.. கடவுள் இருக்கான் குமாரு.. அர்ச்சனா மம்மியுடன் மகள் சாரா.. க்யூட் செல்ஃபி!

ஷிவானி ஏன்
அர்ச்சனாவிடம் 70 நாட்களாக ஒண்ணுமே பண்ணலை என அழுது புலம்பிய ஷிவானி பிக் பாஸ் வீட்டில் இன்னமும் உள்ளே இருக்கிறார். ஆனால், அவருக்கு மைக்கை கழட்டி வைத்து ஆறுதல் சொன்ன அர்ச்சனா அவுட். உண்மையிலேயே ஷிவானியை அவரது ரசிகர்கள் தான் காப்பாற்றுகின்றனரா? என்கிற கேள்வி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அவுட்டாகாத ஆஜீத்
ஒவ்வொரு வாரமும் ஆஜீத்தை கடைசியா திகிலடைய வைத்து விட்டு காப்பாற்றி வருகிறது விஜய் டிவி என்றும், 70 நாள் கழிச்சு ஒருத்தன் எட்டிப் பார்த்த காரணத்திற்காக எல்லாம் சேவ் பண்ணுவது நியாயமே இல்லாத செயல். சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, அர்ச்சனாவை விட ஆஜீத் திறமையான போட்டியாளரா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் கேட்டு அடி வெளுக்கின்றனர்.

காப்பாற்றப்படும் கேபி
விஜய் டிவியின் புராடக்ட் என்பதால் மட்டுமே ஷிவானி, ஆஜீத் மற்றும் கேபி ஒன்றுமே செய்யவில்லை என்றால் கூட இத்தனை நாட்களாக அவர்களை அந்த வீட்டில் பத்திரமாக காப்பாற்றி வருகிறது விஜய் டிவி என்கிற பகிரங்க குற்றச்சாட்டை ஏகப்பட்ட தடவை ரசிகர்கள் எடுத்து வைத்த நிலையிலும், அதற்கு பதிலே பேசாமல், பவர்ஃபுல் போட்டியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு, மக்கள் தான் ஓட்டுப் போட்டு அனுப்பிட்டாங்க என பொய்யான கேம் ஆடுவதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

அடுத்தது யார்?
மேலும், நிச்சயம் அடுத்த வாரமும் ஆஜீத்தோ ஷிவானியோ கேபியோ வெளியே போவாங்கன்னு நம்பிக்கை வரல.. பிளான் பண்ணி வெளியாட்களை அதிகளவில் வெளியேற்றுகின்றனர் என்றும், அடுத்தது ஆரி அல்லது அனிதா சம்பத் ஆகிய இருவரில் ஒருவரைத் தான் வெளியேற்றப் போகின்றனர் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

ரொம்ப போர்
நல்ல நல்ல போட்டியாளர்களை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டு ஒண்ணும் செய்யாமல் வெறும் மிக்சர் மட்டும் தின்பவர்களை ஏன் தான் ஃபைனலுக்கு அழைத்தச் செல்ல நினைக்கின்றனர் என்றும், தெலுங்கு பிக் பாஸ் சூப்பராக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசன் தமிழ் பிக் பாஸ் ரொம்ப போர் என்றும் ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.

நிகழ்ச்சி நடந்தா போதும்
கோவிட் காலத்தில் எப்படியாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் இந்த முறை நடத்தி விட்டால் போதும் என்கிற நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கிறது என்றும், 4.5 கோடி என கமல் வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் நிலையில், அந்த மக்கள் ரசிக்கும் அளவுக்கு ஏன் ஷோ இல்லை? என்கிற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.