Don't Miss!
- News
பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? "அதுக்கு பதிலாக உயிரையே மாய்த்துக் கொள்வேன்" - நிதிஷ் குமார் 'சுறுக்'
- Technology
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Automobiles
2.5 கோடி இதயங்களை வென்ற மாருதி! டாடா, ஹூண்டாய் எல்லாம் பக்கத்துலகூட வர முடியாது
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
சிம்புவை ஏமாற்றி கெட்டபேரை உருவாக்கிய 2 நண்பர்கள்.. காலம் கடந்து சுதாரித்த டி.ஆர். அதிரடி முடிவு!
Recommended Video
சென்னை: நடிகர் சிம்புவின் பெயரை கெடுப்பவர்கள் யார் என்பது குறித்து ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா நடிகர்களில் நடிப்பு மட்டுமல்லாமல் அனைத்து துறைகளில் வல்லவர் சிம்பு. கிட்டத்தட்ட கமல்ஹாசனை போல தான் சிம்புவும். அதுபோல் ஒரு நாள் முழுவதும் நடிக்க வேண்டிய காட்சிகளை, அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் கச்சிதமாக, அழகாக நடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு.
இத்தனை திறமைகள் இருந்தாலும், சிம்புவை பற்றி நல்லதாக வரும் செய்திகளைவிட கெட்ட செய்திகள் தான் அதிகம். ஆனால் இப்போது புதிதாக ஒரு செய்தி சிம்புவை பற்றி வந்துள்ளது.

மாநாடு:
அதாவது சிம்புவின் பெயரை கெடுப்பவர்கள் யார் என்பது தான் அது. இதுகுறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். நம்முடன் அவர்கள் பகிர்ந்துகொண்டவை இது தான். "சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளமாட்டேன் என்று சிம்பு கட்டுப்பாடு விதித்துள்ளார் என்று ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. அதனால், தற்போது சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் ‘மாநாடு' எனும் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளிவராது என்பதும் அந்தச் செய்தியில் இருந்த தகவல்.

இரண்டு நண்பர்கள்:
ஆனால், உண்மை என்னவென்றால், சிம்பு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அப்படி ஒரு கட்டுப்பாட்டை எந்தத் தயாரிப்பாளரிடமும், எந்த இயக்குனரிடமும் விதித்ததில்லை. பிறகு எப்படி இப்படிப்பட்ட செய்திகள் வெளியாகின்றன? அதற்குக் காரணம், சிம்புவோடு 24 மணி நேரமும் ஒட்டிக்கொண்டிருக்கும் சிம்புவின் இரண்டு நண்பர்கள் தான். இவர்கள்தான் சிம்புவின் உதவியாளர்களைப் போல் எப்போதும் அவர் உடனிருந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் தீபன் பூபதி, மற்றொருவர் பெயர் தேவராஜ்.

கெட்ட பேர்:
இந்த இரண்டு பேர் தான், "சிம்பு அப்படிச் சொன்னார். இப்படிச் சொன்னார் " என்று தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் தவறான தகவல்களைக் கொடுக்கின்றனர். அதை சிம்பு சொன்னதாக தயாரிப்பாளர்களும் நம்பி விடுகின்றனர். காரணம், இந்த இரண்டு பேரை நம்பித்தான் சிம்பு கால்ஷிட் உள்ளிட்ட தனது அனைத்து விஷயங்களையும் ஒப்படைத்துள்ளார். அதைச் சரியாக செய்து, சிம்புவின் முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்க வேண்டிய இந்த இரண்டு பேரும், அதனை தங்களுக்கு சாதகமாக தப்பும் தவறுமாகச் செய்து, சிம்புவுக்கு இண்டஸ்ட்ரியில் கெட்டபெயரை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.

துரத்தி விடப்பட்டனர்:
இதையெல்லாம் சிம்புவின் நலம் விரும்பிகள் சிம்புவிடம் மெதுவாக எடுத்துச் சொன்னார்கள். அதேநேரத்தில், சிம்புவுக்கும் மெல்ல மெல்ல உண்மை தெரியவந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் பற்றி தன் தந்தை டி.ராஜேந்தரிடம் மனம்விட்டுப் பேசிய சிம்பு, அவரின் துணையோடு தன் வளர்ச்சிக்கு தடையாக இருந்த, தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருந்த, தன் சம்பாத்யத்தை ஆட்டயப்போட்டுக்கொண்டிருந்த தீபன் பூபதியையும், தேவராஜையும் துரத்திவிட்டார்.

வெற்றி முகம்:
இதையடுத்து இப்போது சிம்பு தொடர்பான அனைத்து வேலைகளையும் அவரது தந்தை டி.ராஜேந்தர் தான் பார்த்து வருகிறார். அவருடன் சிம்புவின் தாயார் உஷாவும், தங்கையும் சேர்ந்து சிம்புவின் கால்ஷீட் உள்ளிட்டவைகளை கவனிக்க தொடங்கியுள்ளனர். எனவே இனி சிம்புவுக்கு என்றுமே வெற்றி முகம்தான்" என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். எப்படியோ நல்லது நடந்தால் மகிழ்ச்சி.