»   »  எந்திரன் 2: ரஜினிக்கு "வில்லன்" ஹிருத்திக் ரோஷன்?

எந்திரன் 2: ரஜினிக்கு "வில்லன்" ஹிருத்திக் ரோஷன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி நடிப்பில் இன்று தொடங்கியிருக்கும் எந்திரன் 2 படத்தில் இருந்து ஹாலிவுட் நடிகர் அர்னால்டு விலகிவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக ஹிருத்திக்ரோஷன் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிக்கும் எந்திரன் 2 வின் படப்படிப்பு இன்று காலை சென்னையில் உள்ள EVP அரங்கத்தில் தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பினை ஷங்கர் தொடங்கி இருக்கிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

எந்திரன் 2

எந்திரன் 2

எந்திரன் 2 படத்தைப் பற்றி சிறகடித்துப் பறந்த பல தகவல்கள் மற்றும் வதந்திகள் ஆகியவற்றிற்கு சமீபத்தில் போட்ட பூஜையின் மூலம் படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்தனர். இன்று இப்படத்தின் படப்பிடிப்பை ஷங்கர் சென்னையில் உள்ள EVP அரங்கத்தில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி இருக்கிறார். ரஜினிகாந்துடன் இணைந்து எமி ஜாக்சன் நடிப்பது மட்டுமே தற்போது உறுதியாகி இருக்கிறது.

அர்னால்டு

அர்னால்டு

ஹாலிவுட் நடிகர் அர்னால்டை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பலத்த முயற்சிகளை இயக்குநர் ஷங்கர் மேற்கொண்டு வந்தார். 100 கோடி சம்பளம் என்ற அர்னால்டின் நிபந்தனைக்கு தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும், அதனால் அவர் இப்படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவலாக வெளியாக ஆரம்பித்தன.

வில்லன் யாரு

வில்லன் யாரு

இந்நிலையில் தற்போது இப்படத்தில் அர்னால்டுக்குப் பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைக்க ஷங்கர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர். ரஜினிக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் ஹிருத்திக்ரோஷனுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம்.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்தப் படத்தில் நடிப்பதற்கு அர்னால்டு போட்ட நிபந்தனைகளே வில்லன் மாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள். சம்பளமாக 120 கோடி மற்றும் அவருடைய பாதுகாவலர்கள், உதவியாளர்கள் என்று வருகின்ற அனைவருக்கும் தங்குமிடம், சாப்பாடு ஆகியவற்றை அர்னால்டு கேட்டதாகவும், இதனால் தான் அர்னால்டு வேண்டாம் என்ற முடிவுக்கு ஷங்கர் வந்ததாகவும் கூறுகின்றனர்.

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், வசனம் மற்றும் பாடல்களுக்கு மதன் கார்க்கி, ஒளிப்பதிவுக்கு நீரவ் ஷா, விஷுவல் எபெக்ட்ஸுக்கு ஸ்ரீநிவாஸ் மோகன் மற்றும் கலைக்கு முத்துராஜ் ஆகியோருடன் எந்திரன் 2 வை ஷங்கர் தொடங்கி இருக்கிறார். படப்பிடிப்பு இன்று துவங்கி விட்டதால் விரைவில் வில்லன் யார் என்பதை முறைப்படி படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Rajini - Shankar's Endhiran 2 Shooting Starts from Today. Now Sources said Arnold Schwarzenegger has out of the movie and may be Hrithik Roshan play the Antagonist Role in this Film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil