ஹைட்டெக்காக தயாரான சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2 கதை.. ஓகே சொன்ன மாஸ்டர் விஜய்.. அடுத்து இதுதானாமே?

By

சென்னை: சூப்பர் ஹிட்டான தனது படத்தின் இரண்டாம் பாகத்தில், விஜய் அடுத்து நடிக்கப் போவதாக கோலிவுட்டில் செய்தி பரவி வருகிறது.

Recommended Video

Thalapathy 65 with Parthiban | UnKnown facts of Thalapathy

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படம், மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் விஜய் மற்றும் விஜய் சேதுபதி லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடந்தபோது நடிகர் விஜய்யிடன் வருமான வரித்துறையினர் விசாரணை

குட்டி ஸ்டோரி

குட்டி ஸ்டோரி

பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து விசாரணை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின் நெய்வேலிக்கு படப்பிடிப்புக்குச் சென்ற விஜய்யை பார்க்க திருவிழா போல ரசிகர்கள் கூடினர். அப்போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வைரலானது. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான குட்டி ஸ்டோரி கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியானது.

அனிருத் இசையில்

அனிருத் இசையில்

அந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என்று தொடங்கும் அப் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி உள்ளார். அனிருத் இசையில் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இது. ஏற்கனவே கத்தி படத்துக்காக அவர் இசையில் செல்பிபுள்ள பாடலை விஜய் பாடியிருந்தார். இந்தப் பாடல் வரிகள், ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டன.

பாடல் வெளியீடு

பாடல் வெளியீடு

இதனால் பாடல் டிரெண்ட் ஆனது. இந்நிலையில் இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வரும் 15 ஆம் தேதி நடக்கிறது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி படத்தை வெளியிட பரபரப்பாக வேலைகள் நடக்கின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்று பேசப்பட்டு வருகிறது. சுதா கொங்கரா இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால், இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கப் போவதாக கோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளது. இந்தப் படம், சூப்பர் ஹிட்டான துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X