twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வனில் மூனு ஹீரோன்னு தெரியும்..வில்லன் யார்னு தெரியுமா?

    |

    சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 3 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இதில் ஆதித்த கரிகால சோழனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    Recommended Video

    Ponniyin Selvan படத்தில் வில்லன் யார்? *Entertainment

    இவர்கள் தவிர பூங்குழலியாக ஐஸ்வர்ய லட்சுமி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சிறிய பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் நந்தினியாக மட்டுமல்ல, மந்தாகினி என்ற ஊமை ராணி கேரக்டரிலும் நடிக்கிறார். அவர் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

    அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்

    வந்தியத் தேவனான கார்த்தி ஹீரோ என்றால், வில்லன் யார்? மணிரத்னம் கதையை எப்படி கட்டமைத்து இருக்கிறார்? என்பது பற்றிய இங்கே விரிவாக பார்க்கலாம்.

    பொன்னியின் செல்வன் ஆரம்ப சீன்

    பொன்னியின் செல்வன் ஆரம்ப சீன்

    தலைநகர் தஞ்சாவூரில் சோழப் பேரரசர் சுந்தர சோழர் அதாவது, பிரகாஷ் ராஜ் உடல் நலிவுற்று மரணப் படுக்கையில் இருக்கிறார். அவரது 2 மகன்களில் மூத்தவரான ஆதித்த கரிகாலன் அதாவது, விக்ரம் காஞ்சியில் எதிரிப்படைகளை வீழ்த்த படையோடு இருக்கிறார். அவரிடம் இருந்து பேரரசருக்கு ஓலை கொண்டு செல்லும் வந்தியத்தேவன் அதாவது, கார்த்தியிடம் இருந்து கதை தொடங்குகிறது.

     பொன்னியின் செல்வன் ஹீரோ இவர் தான்

    பொன்னியின் செல்வன் ஹீரோ இவர் தான்

    அவரது இளைய மகனும், பிற்காலத்தில் தன்னிரகற்ற பேரரசனாய் விளங்கியவருமான அருள்மொழித் வர்மன் எனும் ராஜராஜ சோழன், இலங்கை காடுகளில் படையோடு தங்கியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஜெயம்ரவி. பொன்னியின் செல்வன் கதை, சோழப் பேரரசை சுற்றி இருக்கும் அபாயமும், ஆபத்துகளும், சூழ்ச்சிகளும் எப்போது முடிவுக்கு வரும்? என்ற ஆவலோடு நம்மை இழுத்துச் செல்லும். கதையில் வந்தியத் தேவனான கார்த்தி முதன்மை கதாபாத்திரமாக காட்டப்பட்டு இருப்பார்.

     கதையில் யார் வில்லன்

    கதையில் யார் வில்லன்

    வந்தியத் தேவன் தஞ்சாவூர் செல்லும் வழியில் பழவேட்டரையர் தலைமையில் கூடும் குறுமன்னர்களின் இரவுநேர அந்தரங்க ஆலோசனையில் ஆதித்த கரிகாலனை கொல்ல நடக்கும் சதியை அறிந்து கொள்கிறான்.முதலில் பெரிய பழுவேட்டரையர் சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையர் பார்த்திபனும் வில்லனாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள்தான் வில்லன் என்று சொல்லமுடியாதபடிக்கு அங்கே ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.

    ஒருவேளை இவர் தான் வில்லனோ

    ஒருவேளை இவர் தான் வில்லனோ

    அடுத்து, நந்தினி கதாபாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராய். இவர்தான் கதையின் போக்கையே மாற்றும் முக்கிய கதாபாத்திரம். மொத்த பொன்னியின் செல்வன் கதையையே ஐஸ்வர்யா ராயுக்கும் த்ரிஷாவுக்கும் நடக்கும் போட்டியாகவே சித்தரிக்க முடியும். அந்தளவிற்கு இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் போட்டி இருக்கும். இயல்பாக த்ரிஷா ஹீரோயின் என்பதால் ஐஷ்வர்யாதான் வில்லி என்கிற தோற்றம் வரும்.

     இவராக இருக்கவும் வாய்ப்பு இருக்கு

    இவராக இருக்கவும் வாய்ப்பு இருக்கு

    இவரின் சூழ்ச்சிகளால் மிக முக்கியமான கதாப்பாத்திரம் கொல்லப்பட்டாலும், நந்தினிக்கு நேரடி பங்கு இருக்கிறதா? என்பது புரியாத புதிர்தான். ஆனால் நந்தினியான ஐஷ்வர்யா ராயின் உண்மையான கதை தெரிந்தால் அவரை வில்லி என்று சொல்ல யாருக்கும் மனம் வராது.இதுதவிர தனது சித்தப்பா சுந்தரச் சோழனுக்கு அதாவது பிரகாஷ்ராஜுக்குப் பிறகு சோழ தேசத்துக்கு தானே அரசராகவேண்டும் என நினைக்கிற ரஹ்மான் கூட ஒருவகையில் வில்லன் தான்.

    என்னப்பா லிஸ்ட் நீளமா போகுது

    என்னப்பா லிஸ்ட் நீளமா போகுது

    இதுதவிர பாண்டிய நாட்டைச் சேர்ந்த ரவிதாசன், சோமன் சாம்பவான், இடும்பன்காரி, தேவராளன், கிரமவித்தன், ராக்கம்மாள் ஆகியோரும், வில்லன்களாக இருக்கின்றனர்.இவர்களை தவிர பார்த்திபேந்திர பல்லவன், கந்தமாறன், சம்புவரையர், பழையாறை மருத்துவரின் மகன் பினாபகாணி ஆகியோர் சோழ குலத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ ஆபத்தாக மாறிவிட்டனர்.

    மணிரத்னம் யாரை வில்லனாக்கி இருப்பார்

    மணிரத்னம் யாரை வில்லனாக்கி இருப்பார்

    கடைசிவரை பொன்னியின் செல்வன் கதையில் சூழ்ச்சி, சூழல்களால் சிலர் வில்லன்களாகக் காட்டப்படுவார்களே தவிர, இவர்தான் வில்லன் என கல்கி சுட்டிக்காட்டியிருக்க மாட்டார். கல்கியின் இதே நிலைப்பாட்டை வைத்து மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியிருக்கிறாரா? இல்லை படத்திற்கு வில்லனை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காக நந்தினி போன்ற கதாபாத்திரங்களை எதிரியாக காட்ட முயன்றாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.. பொன்னியின் செல்வன் கதையில் உண்மையான எதிரி யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    English summary
    As per Ponniyin Selvan novel Kathi aka Vandhiyathevan playing hero role. In the novel so many charaters are showed as antagonist. But Kalki didn't mentioned anyone as Villian. In cinema, who was described as Villian by Maniratnam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X