»   »  விஜய்யின் 'குருவி' பிளாப்பா?: எவன் சொன்னது- உதயநிதி ஸ்டாலின்

விஜய்யின் 'குருவி' பிளாப்பா?: எவன் சொன்னது- உதயநிதி ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குருவி படம் பிளாப் என்று யார் சொன்னது என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, விவேக், சுமன் உள்ளிட்டோர் நடிப்பில் 2008ம் ஆண்டு வெளியான படம் குருவி. அந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயிண்ட் மூவீஸ் மூலம் தயாரித்தார்.


குருவி படம் ஓடவில்லை. அதை விஜய்யே மறக்க நினைக்கிறார் என்று பேசப்படும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் உல்டாவாக கூறியுள்ளார்.


குருவி

குருவி

குருவி படம் பிளாப் என்று யார் சொன்னது? பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் ஆகவில்லை. அவ்வளவு தான். மற்றபடி எனக்கு நல்ல லாபம் கிடைத்தது என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.


லாபமா?

லாபமா?

படம் ஓடவில்லை என்று வினியோகஸ்தர்கள் குமுறிய நிலையில் உதயநிதி ஸ்டாலினோ தனக்கு குருவியால் லாபம் என்று கூறியிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.


அஜீத்

அஜீத்

அஜீத்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க காத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இது தொடர்பாக அவர் ஏற்கனவே அஜீத்திடம் பேசியுள்ளார். அவர் வார்த்தைக்காக காத்துள்ளார்.


சரவணன் இருக்க பயமேன்

சரவணன் இருக்க பயமேன்

உதயநிதி தற்போது எழில் இயக்கத்தில் சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் சேர்ந்து காமெடி செய்துள்ளது சந்தானம் அல்ல சூரி என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Udhayanidhi Stalin said in a recent interview that he got good money as a producer of Vijay starrer Kuruvi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil