For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவரா? டேஞ்சர் ஜோனில் இருப்பவர்கள் யார்?

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் திங்கட்கிழமை மங்களகரமாக நாமினேஷன் நடந்து முடிந்துள்ளது.

  இந்த வாரம் பிரியங்கா அண்ட் கோவால் கேப்டனாக மாறி காப்பாற்றப்பட்டதால் "மற்றும் அபிநய்" நாமினேஷனில் இடம்பெறவில்லை.

  நாமினேட் ஆகியுள்ள 6 பேரில் யார் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது மற்றும் கடைசி 3 இடங்களில் யார் இருப்பார்கள் என்பது குறித்து ஒரு சின்ன அலசல் செய்வோம்.

  நீங்க பிக் பாஸ் வீட்டு ஓனரா?... பிரியங்காவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் !நீங்க பிக் பாஸ் வீட்டு ஓனரா?... பிரியங்காவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் !

  6பேர் நாமினேஷன்

  6பேர் நாமினேஷன்

  பிரியங்கா, தாமரை செல்வி, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, நிரூப் மற்றும் பாவனி ஆகிய 6 போட்டியாளர்கள் 2 ஓட்டுகளுக்கு மேல் அதிகம் பெற்ற நிலையில், இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ளனர். ராஜு, அக்‌ஷரா உள்ளிட்ட போட்டியாளர்கள் வெறும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றதால் நாமினேஷனுக்கு வரவில்லை.

  சண்டை போடுவது யார்

  சண்டை போடுவது யார்

  டஃப் போட்டியாளர்களாக கருதப்படும் நிரூப், பிரியங்கா உள்ளிட்டவர்கள் இந்த நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். கேமே ஆட தெரியாது என சொல்லிக் கொண்டே முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை போட்டியாளர்களுடன் சண்டை போட்டுக் கொண்டே தாமரை தப்பித்து வருகிறார். பிரியங்கா, நிரூப், பாவனி மற்றும் தாமரை ஆகிய நான்கு பேரும் தான் இந்த லிஸ்ட்டில் சண்டை போட்டு வருகின்றனர்.

  காலியாக்கும் காயின்

  காலியாக்கும் காயின்

  காயின் பவரை வைத்திருப்பவர்கள் ஆரம்பத்திலேயே அதனை பயன்படுத்தாமல் கடைசியில் பயன்படுத்தலாம் என நினைத்துக் கொண்டே சுருதி மற்றும் இசைவாணி போல வெளியேறி வருகின்றனர். இந்த வாரமும் காயின் பவரை கொண்டுள்ள நிரூப் மற்றும் பாவனி நாமினேட் ஆகி உள்ள நிலையில், இவர்கள் இருவரில் ஒருவர் அதிரடியாக தூக்கப்படுவார்களா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

  சிக்கலில் பிரியங்கா

  சிக்கலில் பிரியங்கா

  கடந்த வாரம் தாமரை செல்வியுடன் சண்டை போட்ட இசைவாணி வெளியேறினார். அதற்கு முன்னதாக தாமரையின் காயினை திருடிய சுருதி வெளியேறினார். தாமரைக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கும் நிலையில் இந்த வாரம் முதல் நாளே தாமரை மற்றும் பிரியங்காவின் சண்டை பெரிதானது. விஜய் டிவி தொகுப்பாளினி என்றால் நீங்க தாமரைக்கு தலைவர் பதவிக்கு தகுதி இல்லைன்னு சொல்லலாமா? என்கிற கேள்வியை மக்கள் எழுப்பி வாக்குகளை தாமரை பக்கம் திருப்பினால் பிரியங்கா இந்த வாரம் வெளியேறுவது நிச்சயம். மேலும், பாவனியின் தோழிகள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  நடிக்கும் தாமரை

  நடிக்கும் தாமரை

  நாடக நடிகையான தாமரை செல்வி தான் ஒரு அப்பாவி என்பது போலவே முகமூடி போட்டுக் கொண்டு விளையாடியே கடைசி வரை வந்து விடலாம் என நினைப்பதை அறிந்து கொண்ட ராஜு உள்ளிட்ட சக போட்டியாளர்கள் அவரை நாமினேட் செய்துள்ள நிலையில், தொடர்ந்து சண்டை போட்டே ஷோவை நடத்தி வரும் தாமரை செல்வி வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளன.

  வெளியேற பொவது யார்

  வெளியேற பொவது யார்

  இப்படி நாமினேஷனில் இடம்பெற்றுள்ள அனைவருமே இந்த வாரம் வெளியேற வேண்டும் என்று ஒவ்வொரு தரப்பும் கமெண்ட் போட்டு வருகிறது. ஆனால், சண்டை போடும் போட்டியாளர்கள் வெளியேறி விட்டால் சுவாரஸ்யம் குறைந்து விடும். இதில், ஆட்டத்திலேயே இல்லாத இருவர் என்றால் இமான் அண்ணாச்சி மற்றும் ஐக்கி பெர்ரி தான் இசைவாணி வெளியேறிய நிலையில் இமானுக்கு சண்டை போட அபிஷேக் கிடைத்து விட்டார். அதனால், இந்த வாரம் ஐக்கி பெர்ரி வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

  வெளியேற்றப் போவது யார்

  வெளியேற்றப் போவது யார்

  பிக் பாஸ் ரசிகர்கள் இந்த வார இறுதி ஷோவை காண இன்னொரு சிறப்பான விஷயமும் உள்ளது. வார வாரம் வெளியேற போவது யார் என்பதை அறிந்து கொள்ள நிகழ்ச்சியை கண்டு வரும் ரசிகர்கள் கமல்ஹாசன் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிக் பாஸ் போட்டியாளரை இந்த வாரம் வெளியேற்றப் போகும் அந்த தொகுப்பாளர் யார்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய்சேதுபதி மற்றும் ரம்யா கிருஷ்ணனின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. அந்த தகவலும் விரைவில் லீக்காகி விடும் வெயிட் பண்ணி பார்ப்போம்.

  English summary
  Priyanka or Thamarai Selvi may get evicted this week for their unwanted fight. But, Week Contestants like Immman Annachi or Iykki Berry also have high chance to get evicted this week.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X