பிக் பாஸ் அல்டிமேட் எவிக்ஷன்.. இந்த வாரம் எந்த தாடி வெளியேற போகுதுன்னு தெரியுமா?
சென்னை: சிம்பு வந்ததில் இருந்து புதுத் தெம்பு பெற்றது போல பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி புதிய உத்வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
Recommended Video
பிக் பாஸ் வீட்டின் ஸ்மோக்கிங் ரூமில் கசமுசா காட்சிகள் எல்லாம் நடப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று வெளியானதும் அந்த நிகழ்ச்சியை இன்னமும் பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
முதல் வாரத்தில் எவிக்ஷன் செய்யாத சிம்பு, இந்த வாரம் யாரை எவிக்ஷன் செய்யப் போகிறார் என்கிற அன் அஃபிஷியல் போலிங் கணிப்புகளை இங்கே விரிவாக பார்ப்போம்.

சிம்பு தந்த தெம்பு
கமல் சார் கண்டிஷன் போட்டு கன்ட்ரோல் பண்ணுவார் என வெள்ளிக்கிழமை ராமசாமியாக மாறி வந்த பாலாஜி முருகதாஸ் எல்லாம் பிக்பாஸே நான் தான் என காலரை தூக்கி விட்டு கெத்தாக சுற்ற காரணமே சிம்பு தந்த புதிய தெம்பு தான் என்கின்றனர். ஃபைனல்ஸை எல்லாம் யோசிக்காதீங்க.. இப்போ ஆட்டத்தை சுவாரஸ்யமாக்குங்க என்றதும் புகுந்து விளையாடி வருகிறார்.

அபிராமியுடன் தொடர்பா
நிரூப்பின் முன்னாள் காதலியான அபிராமியையும் பாலாஜி முருகதாஸையும் இந்த வாரம் கிராமத்து டாஸ்க்கில் கணவன் மனைவியாக நடிக்க வைத்துள்ள நிலையில், இருவரும் நிஜ கணவன் மனைவியாகவே மாறிவிட்டனர் என சமூக வலைதளங்களில் சிலர் கொளுத்திப் போட்ட தீ காட்டுத் தீ போல மாறி பெரும் சர்ச்சையை கிளப்பியது. நிரூப்புக்காக பாலாவை பற்றி இப்படி அவதூறு பரப்புகின்றனர் என்றும் பாலா ரசிகர்கள் திட்டித் தீர்த்து விட்டனர்.

நாமினேஷனில் யார் யார்
இந்த பஞ்சாயத்தை எல்லாம் இந்த வாரம் சிம்பு எப்படி டீல் செய்ய போகிறார் என்பது ஒரு பக்கம் இருக்க இந்த வாரம் யார் எவிக்ட் ஆவார் என்கிற ஆர்வம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த வாரம் நாமினேஷனில் தாமரை, சினேகன், தாடி பாலாஜி, ஜூலி, சுருதி, அனிதா, அபிராமி உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

டேஞ்சர் ஜோனில் யார்
அதிக வாக்குகளுடன் தாமரை செல்வி முதலிடத்தில் இந்த வாரம் சேவ் ஆக காத்திருக்கிறார். அவரை தொடர்ந்து ஜூலி, அனிதா மற்றும் சுருதி இருக்க கடைசி 3 இடங்களில் மிகவும் குறைவான ஓட்டுக்களுடன் அபிராமி, தாடி பாலாஜி மற்றும் சினேகன் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.

எந்த தாடி போகப் போகுதோ?
இதில், கடைசி இரு இடங்களில் தாடி பாலாஜி மற்றும் சினேகன் உள்ளனர். ஏற்கனவே சினேகன் கமலின் கடைசி எபிசோடிலேயே வெளியேற வேண்டிய நிலையில், அவர் சேவ் செய்யப்பட்டார். வெளியே அவரது மனைவி கனிகா ரவி தினமும் புலம்பி வருவதால், இந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்றிருக்கும் சினேகன் வெளியேறுவாரா? அல்லது கமலுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் சினேகனை சேவ் செய்து விட்டு உடல் நலம் சரியில்லாத தாடி பாலாஜியை சிம்பு எவிக்ட் செய்வாரா? என்பது நாளை ஷூட்டிங் முடிந்ததும் லீக் ஆகிவிடும்.


Click it and Unblock the Notifications











