பாகுபலியில் ஸ்ரீதேவி நடிக்காததற்கு காரணம்.. பொய் சொல்லாதீங்க.. தயாரிப்பாளரைச் சாடிய போனி கபூர்!

மும்பை: அழகுக்கு ஒரு அடையாளமாகத் திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி, தனது அழகாலும் நடிப்பாலும் இந்திய திரையுலகை முடிசூடா ராணியாக ஆட்சி செய்தார். இந்தியாவின் பெருமை மிகு சிறந்த நடிகைகளில் ஒருவராக வரலாறு படைத்த அவர், தனது 50 ஆண்டுகால திரைப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

நடிகை ஸ்ரீதேவி காலமானபோது, கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் துயரில் ஆழ்ந்தனர். இன்றளவும் அவரது மறைவை நம்ப முடியாத நிலையில் இருக்கும் ரசிகர்களும் உள்ளனர். அவர் வாழ்ந்த காலத்தில், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதேவியின் கால்ஷீட்டுகளுக்காகக் காத்திருந்தனர் என்பது வரலாறு.

ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி: தி பிகினிங்' மற்றும் 'பாகுபலி: தி கன்குளூஷன்' திரைப்படங்களில் சிவகாமி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்க இருந்தார். ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்திற்காக ராஜமௌலி ஸ்ரீதேவியை அணுகி பெரிதும் முயற்சி செய்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வாய்ப்பு நழுவியது. பாகுபலியில் ஸ்ரீதேவி நடிக்காததற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. சமீபத்தில், அவரது கணவரும், பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் இது குறித்து ஒரு நேர்காணலில் சில பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்தார்.

'பாகுபலி' திரைப்படம், தெலுங்கு திரையுலகின் தரத்தை உயர்த்தியதுடன், 'பான் இந்தியா' கலாச்சாரத்திற்கு வழிவகுத்தது. இத்திரைப்படத்திற்கு பிறகு, தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி, அதன் அடித்தளத்தை அசைத்தன. இந்தியத் திரைப்படம் என்றால் தெலுங்குத் திரைப்படம் என்று சொல்லும் அளவுக்கு அதன் புகழ் உயர்ந்தது. 'பாகுபலி' இட்ட பாதையில், 'RRR', 'கார்த்திகேயா 2', 'புஷ்பா: தி ரைஸ்', 'புஷ்பா: தி ரூல்', 'கல்கி 2898 AD' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை அள்ளிக் குவித்தன.

Why Actress Sridevi Rejects rajamouli s baahubali Rajamatha Character Poni Kapoor Explains
Photo Credit:

பாகுபலி: பாகுபலி திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் வலிமையானது. ஆனால் பிரபாஸ், அனுஷ்கா, ராணா ஆகியோருக்கு இணையாக, ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரம் மிகவும் பலம் வாய்ந்தது. இப்பாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், தனது அழகாலும், கம்பீரத்தாலும், நடிப்பாலும் சிவகாமி பாத்திரத்திற்காகவே பிறந்தவர் போல ஒன்றிப் போனார். இது இந்தியத் திரையுலகின் ஐகானிக் கதாபாத்திரங்களில் ஒன்றாக நிலைபெற்றது. ஆனால், இந்த கதாபாத்திரத்திற்காக முதலில் ஸ்ரீதேவியைத் தான் ராஜமௌலி அணுகி கதை சொல்லியிருந்தார். ஸ்ரீதேவி 10 கோடி ரூபாய் சம்பளம், ஹோட்டலில் கூடுதலாக ஒரு அறை, மற்றும் படப்பிடிப்புக்கு தான் வரும்போது குழந்தைகளுக்கும் கூடுதலாக விமான டிக்கெட்டுகள் கேட்டதால் அவர் தவிர்க்கப்பட்டதாக ராஜமௌலி பல நேர்காணல்களில் தெரிவித்திருந்தார்.

ராஜமாதா கதாபாத்திரம்: இது குறித்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் விளக்கமளித்தார். சிவகாமி கதாபாத்திரத்திற்காக ஸ்ரீதேவியைத் தான் ராஜமௌலி அணுக நினைத்தது உண்மை. அவர் வீட்டிற்கே வந்து கதை கூறினார். இந்தக் கதாபாத்திரத்தின் மீது ஸ்ரீதேவிக்கு ஆர்வம் ஏற்பட்டதால், அவர் மீது ராஜமௌலிக்கு மேலும் மரியாதை கூடியது. ஆனால், பாகுபலியில் ஸ்ரீதேவி நடிக்காததற்கு ராஜமௌலி அல்ல, அப்படத்தின் தயாரிப்பாளர்கள் தான் காரணம். ராஜமௌலி கதை சொல்லிவிட்டுச் சென்ற பிறகு, தயாரிப்பாளர்கள் தங்கள் வீட்டிற்கு வந்து சம்பளம் குறித்து பேரம் பேசினர். ஆனால், ஸ்ரீதேவி ஏற்கனவே பெற்றுக் கொண்டிருந்ததைக் காட்டிலும் குறைவான சம்பளத்தை தான் அவர்கள் வழங்க முன்வந்தனர். ஸ்ரீதேவி நடித்தால் பாகுபலிக்கு இந்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று தெரிந்தும், இவ்வாறு அவர்கள் நடந்துகொண்டனர்.

Why Actress Sridevi Rejects rajamouli s baahubali Rajamatha Character Poni Kapoor Explains
Photo Credit:

இதுதான் காரணம்: இதன் காரணமாகத்தான் தனது மனைவி பாகுபலியில் இருந்து விலகினார் என்று போனி கபூர் விளக்கினார். மேலும், தங்கள் வீட்டில் நடந்த விஷயங்களை தயாரிப்பாளர்கள் ராஜமௌலியிடம் தவறாகப் பரப்பிவிட்டதாக போனி கூறினார். ஹோட்டலில் ஒரு தளத்தை முன்பதிவு செய்ய கேட்டது உண்மைதான் என்றும், ஏனெனில் அப்போது தங்களது குழந்தைகள் சிறியவர்கள் என்றும், அவர்களுக்கு விடுமுறை கிடைக்கும்போது பெரிய கால்ஷீட்களை கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாகவும் போனி ஒப்புக்கொண்டார். ஆனால் தயாரிப்பாளர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஸ்ரீதேவி அந்தப் பாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும், இதன் விளைவாக தயாரிப்பாளர்கள் ஸ்ரீதேவியைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் ராஜமௌலியிடம் கூறினர் என்றும் போனி கபூர் கூறினார். 'பாகுபலி: தி எபிக்' வெளியீட்டை முன்னிட்டு போனி கபூரின் இக்கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கருத்துக்களுக்கு ராஜமௌலியும், பாகுபலி தயாரிப்பாளர்களும் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X