Don't Miss!
- News
ஆளுநரை பதவி நீக்கம் செய்ய இம்பீச்மெண்ட் கொண்டுவர அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவை: கி.வீரமணி
- Technology
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- Lifestyle
வார ராசிபலன் 22.01.2023-28.01.2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
எங்கப்பா அந்த 3 பிக் பாஸ் பிரபலங்களே காணோம்.. ’துணிவு’ அறிவிப்பில் மிஸ்ஸான அமீர், பாவனி, சிபி!
சென்னை: துணிவு படத்தில் அஜித்தின் கேங்கில் பிக் பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி மற்றும் சிபி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், வெளியான பாடல்களில் கூட அந்த மூவரும் இடம்பெற்றனர். ஆனால், நேற்று வெளியான கதாபாத்திரங்களின் அறிவிப்பில் அவர்கள் மூவரையுமே காணவில்லையே ஏன்? என்கிற கேள்வி பிக் பாஸ் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இந்த முறை விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரண்டு பெரிய படங்களிலுமே பிக் பாஸ் பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த விக்ரம் படத்திலும் பிக் பாஸ் பிரபலங்கள் இடம்பெற்று இருந்தனர்.
அஜித்தின் பெயர் என்ன? என சர்ப்ரைஸ் வைத்ததை விட இவங்க பெயர்கள் என்ன என்கிற கேள்வியே தற்போது அதிகம் எழுந்துள்ளது.
அதிரடியாக
ரிலீஸாகும்
துணிவு
ட்ரெய்லர்...
கலக்கத்தில்
வாரிசு
டீம்...
அஜித்
கேரக்டர்
தான்
மேட்டரா?

துணிவு டிரைலர் வருது
இன்று
மாலை
அஜித்தின்
துணிவு
படத்தின்
அதிரடியான
டிரைலர்
7
மணிக்கு
வெளியாக
உள்ளது.
சினிமாவில்
தொடர்ந்து
ஆயுத
கலாச்சாரம்
பெருகி
வரும்
நிலையில்,
நடிகர்
அஜித்தும்
இந்த
முறை
துப்பாக்கி
எடுத்துக்
கொண்டு
இஷ்டத்துக்கு
சுட்டுத்
தள்ள
ரெடியாகி
விட்டார்.
துப்பாக்கியோ,
கத்தியோ
பிடித்தால்
தான்
மாஸ்
ஹீரோ
என்கிற
நிலை
உருவான
சினிமா
உலகத்தில்
அதை
மாற்றுவதும்
கஷ்டம்
தான்.

நடிகர்களின் ரோல்
பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் முதல் நாயகி மஞ்சு வாரியர் வரை என்ன என்ன கதாபாத்திரங்களில் துணிவு படத்தில் நடித்துள்ளனர் என்கிற மொத்த அறிவிப்பையும் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். படத்தின் முக்கிய நடிகர்கள் இவங்க தான் என்பதை குறிப்பால் உணர்த்தி விட்டார். வீரா, சமுத்திரகனி, பிரேம், ஜான் கொக்கன் உள்ளிட்டவர்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

அஜித்தின் கேரக்டர்
மேலும், அஜித் இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை கண்டுபிடியுங்க என ரசிகர்களை கெஸ் பண்ண சொல்ல, பலரும் விநாயக் மகாதேவ் வந்தால் படம் மங்காத்தா 2வாக மாஸ் காட்டும் என கமெண்ட் போட்டு வந்தனர். ஆனால், அந்தோணி தாஸ் என்கிற கதாபாத்திரத்தில் அஜித் இந்த படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமீர், பாவனி, சிபி எங்கே?
இந்நிலையில், சில்லா சில்லா, காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா என மூன்று பாடல்களிலும் அஜித்தின் கோர் டீம் மெம்பர்களாக நடித்திருந்த பிக் பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி மற்றும் சிபி 3 பேரும் எங்கேப்பா என்றும் அவர்கள் கதாபாத்திர பெயர்களையே அறிவிக்கவில்லையே முக்கிய ரோலில் அவர்கள் நடிக்கவில்லையா? என்கிற கேள்வியை பிக் பாஸ் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

மணி ஹெய்ஸ்ட் மாதிரியா?
மணி ஹெய்ஸ்ட்டில் ஹீரோ புரபோஸர் டீமில் உள்ள நபர்களின் பெயர்களுக்கு பதில் ஊர் பெயர்கள் வைக்கப்பட்டு இருக்கும். அதே போல இந்த பிக் பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி மற்றும் சிபியின் பெயர்களுக்கு பின்னால் ஏதாவது ஒரு ரகசியம் இருக்கும் அதனால் தான் அம்பலப்படுத்தவில்லை என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன. கண்டிப்பாக மூன்று பேரும் இன்று வெளியாகும் டிரைலரில் இடம்பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.