தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தை ஏன் பார்க்கணும்? இந்த காரணத்திற்காக தான்!

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். மேலும் இந்துஜா ரவிச்சந்திரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது.

தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தை திரையரங்கில் ஏன் பார்க்கணும் அடுத்த நாள் தான் பொன்னியின் செல்வம் படம் வருதே என யோசிப்பவர்களுக்கு, இந்த காரணத்திற்காக நானே வருவேன் படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.

நானே வருவேன்

நானே வருவேன்

தனுஷ், செல்வராகன், யுவன் சங்கர் ராஜா கூட்டணி பல ஆண்டுகளுக்குப்பிறகு நானே வருவேன் படத்தில் இணைந்துள்ளனர். சரித்திர திரைப்படமான பொன்னியின் செல்வன் 30ந் தேதி வெளியாக உள்ள நிலையில், ஒரு நாள் முன்னதாகவே படத்தை வெளியிட்டு, தொடக்க நாள் மோதலை தயாரிப்பாளர்கள் தடுத்துள்ளனர். முன்பதிவுகளில் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஹீரோ, வில்லன்

ஹீரோ, வில்லன்

நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் ஹீரோ, வில்லன் என இரு வேடங்களிலும் நடிப்பதாக கூறப்படுகிறது. காட்டுக்குள் வசிக்கும் வேடனாகவும், அந்த காட்டுக்குள் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் வரும் ஒரு இன்ஜினியராகவும் தனுஷ் நடித்துள்ளார். திகில், த்ரில்,பூர்வஜென்ம பந்த கதையாக உள்ளது.

செல்வராகவனுக்காக

செல்வராகவனுக்காக

சமீபத்தில் நடிகராக மாறிய செல்வராகவன், முதன்முறையாக தனது சொந்த இயக்கத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திரைக்கதையில் சுவாரசியத்தை புகுத்தும் இயக்குநர் செல்வராகவன் தனது சகோதரர் தனுஷுடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது.

வலுவான ரோல்

வலுவான ரோல்

எல்லி அவ்ராம் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இவர்கள் தைரியம் கொண்ட பெண்ணாக நடித்துள்ளனர். மேலும்,பாலிவுட் நடிகையான எல்லி அவ்ராம் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். இரண்டு நடிகைகளுக்கும் படத்தில் வலுவான கதாபாத்திரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மூவர் கூட்டணி

மூவர் கூட்டணி

புதுப்பேட்டை படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா, செல்வராகவன், தனுஷ் மூன்று பேரும் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தில் இணைந்துள்ளனர். நானே வருவேன். படத்தில் இசை மிகவும் பொருத்தமாக இருப்பதால் இவரின் இசை படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தியேட்டரில் நானே வருவேன் நிச்சயம் பட்டையை கிளப்பும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X