»   »  மாமியாய் நடிக்கலாம் ஓய் ஆனால்...: சாமி 2ல் இருந்து த்ரிஷா விலகியதற்கான காரணம் இதுவா?

மாமியாய் நடிக்கலாம் ஓய் ஆனால்...: சாமி 2ல் இருந்து த்ரிஷா விலகியதற்கான காரணம் இதுவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுஷ்காவுக்கு இருந்த பொறுமை த்ரிஷாவுக்கு இல்லாததால் சாமி 2 படத்தில் இருந்து விலகிவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

சினிமாவை விட்டு விலகிவிடலாமா என்று த்ரிஷா யோசனையில் இருந்தபோது அவர் விக்ரம் ஜோடியாக நடித்த சாமி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவர் சினிமாவில் தொடர்ந்து இருக்க முடிவு செய்தார்.

15 ஆண்டுகளாக ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மாமி

மாமி

சாமி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. சாமியை போன்றே அதன் இரண்டாம் பாகத்திலும் மாமியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமானார்.

த்ரிஷா

த்ரிஷா

சாமி 2 படத்தில் ஒப்பந்தமான த்ரிஷா திடீர் என்று விலகினார். படத்தில் நடிக்குமாறு த்ரிஷாவிடம் விக்ரம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டும் அவர் ஒப்புக் கொள்ளவில்லையாம்.

மகன்

மகன்

சாமி 2 படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் விக்ரம் நடிக்கிறாராம். இதில் அப்பா விக்ரமுக்கு த்ரிஷாவும், மகன் விக்ரமுக்கு கீர்த்தி சுரேஷும் ஜோடி என்று முடிவு செய்திருந்தனர்.

கீர்த்தி

கீர்த்தி

இன்னும் இஞ்சி இடுப்பழகியாக இருக்கும் த்ரிஷா கீர்த்தி சுரேஷுக்கு மாமியார் என்றால் ரசிகர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாமியார் வேடம் வேண்டாம் என்று தான் அவர் படத்தில் இருந்து வெளியேறியிருப்பார் என்று கூறப்படுகிறது.

தமன்னா

தமன்னா

பாகுபலி, பாகுபலி 2 படங்களில் தமன்னாவின் மாமியாராக அனுஷ்கா நடித்திருந்தார். தமன்னாவை விட மார்க்கெட் செமயாக உள்ள அனுஷ்கா துணிந்து மாமியாராக நடித்தார். ஆனால் த்ரிஷா இன்னும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மைண்ட்செட்டிற்கு வரவில்லை போன்று.

English summary
Buzz is that Trisha walked out of Vikram starrer Saamy 2 Square as she was asked to act as Keerthy Suresh's mother-in-law. Trisha was the leading lady of the superhit film Saamy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X