twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீனா வீட்டு துக்கத்திற்கு இரங்கல் தெரிவிக்காத பிரபலங்கள்..எங்கே போனது மனிதாபிமானம்?..எழும் கேள்விகள்

    |

    சென்னை: நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் செயலழிப்பு காரணமாக உயிரிழந்தார் அவரது மறைவுக்கு ரஜினிகாந்த் உட்பட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    Recommended Video

    Meena Husband இறுதிச்சடங்கு..முன்னின்று நடத்தும் பிரபலங்கள்*Celebrity

    ஆனால் அவருடன் நடித்த பலரும், திரையுலக பிரபலங்கள் சிலரும் ட்விட்டரில் கூட இரங்கல் தெரிவிக்காத அளவுக்கு பிசியாக இருக்கிறார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    தனது திரையுலகைச் சேர்ந்த சக கலைஞர் இளம் வயதில் கணவரை இழந்தது உங்கள் மனதை வருத்தமடையச் செய்யவில்லையா என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

    நடிகை மீனாவின் கணவர் உயிரிழக்க காரணம் இதுதான்.. அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறிய தகவல்!நடிகை மீனாவின் கணவர் உயிரிழக்க காரணம் இதுதான்.. அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறிய தகவல்!

    லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்

    லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்

    தமிழ் திரையுலகில் லட்சிய நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். சிவாஜி கணேசனின் ரூம் மேட். இருவரும் ஒன்றாக பராசக்தி ஆடிஷன் கலந்துக்கொண்டவர்கள். கே.ஆர்.ராமசாமி காதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என்கிற தயாரிப்பாளரின் எண்ணத்தை மாற்ற வசனகர்த்த கருணாநிதியின் முயற்சியும் பலித்து சிவாஜி கணேசன் ஹீரோவானார். இந்தப்படத்தில் சிவாஜி கணேசனின் சகோதரராக எஸ்.எஸ்.ஆர் நடித்திருப்பார்.

    திரையுலகில் பல சாதனைகளுக்கு சொந்தமான எஸ்.எஸ்.ஆர்

    திரையுலகில் பல சாதனைகளுக்கு சொந்தமான எஸ்.எஸ்.ஆர்

    எஸ்.எஸ்.ஆருக்கு பல சிறப்புகள் உண்டு. கதாநாயகனுக்குரிய தோற்றம், ஹேர்ஸ்டைல், வசன உச்சரிப்பு, நடிப்புக்கலை அத்தனையிலும் கைதேர்ந்தவர். பெரியார் கொள்கையின் ஈடுபாடு காரணமாக புராண படங்களில் நடிப்பதை மறுத்தவர். வசன உச்சரிப்பில் சிவாஜி கணேசனுக்கு ஈடுகொடுத்தவர். இதனால் இவரை லட்சிய நடிகர் என அழைத்தனர். திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்த முதல் நடிகர் இவர்தான்.

    இறுதிப்பயணத்தை கண்டுக்கொள்ளாத திரையுலகம்

    இறுதிப்பயணத்தை கண்டுக்கொள்ளாத திரையுலகம்

    இப்படிப்பட்ட சிறப்பு பெற்ற நடிகர் எஸ்.எஸ்.ஆர் வயோதிகம் காரணமாக காலமானார். அவரது வீடு எல்டாம்ஸ் சாலையில் இருந்தது. அவருக்கு மாலைப்போட அப்போதைய நடிகர் சங்க நிர்வாகி ராதாரவி வீட்டிலிருந்து (ஒரு தெரு தள்ளி இருந்தது) ஊர்வலமாக கிளம்பிவர காத்திருந்தனர். ஆனால் வெகு சிலரே வந்தனர். 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகிருந்த முன்னணி கதாநாயகனுக்கு தமிழ் திரையுலகம் கொடுத்த மரியாதை இவ்வளவுதான்.

     திரைத்துறையின் போலித்தனமான உறவு

    திரைத்துறையின் போலித்தனமான உறவு

    திரையுலகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் பாடல் போன்ற தன்மை கொண்டது என திரையுலகிலிருந்தவர்களே சொல்வார்கள். சினிமாக்காரன்களை நம்பாதேன்னு என் தந்தை என்னிடம் சொல்வார் என ராதாரவி இரண்டு நாள் முன்னர் கூட மேடையில் பேசினார். திரைத்துறையில் புகழோடு இருக்கும் நடிகை, நடிகர் வீட்டு விஷேஷங்கள் எதுவானாலும் அது கவனிக்கப்படும், ட்ரெண்டாகும், வாழ்த்துகள் குவியும். துக்க நிகழ்வுகளுக்கும் அப்படியே. சிவாஜி இறந்த போது வந்த ரஜினிக்கு வாழ்த்துச் சொல்லும் மனநிலையில் தான் ரசிகன் இருக்கிறான், அப்படியானால் அதை நம்பி தொழில் செய்யும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் எப்படி இருப்பார்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

     மார்க்கெட் போனால் எல்லாம் போச்சு

    மார்க்கெட் போனால் எல்லாம் போச்சு

    சாதாரண நிலையில் உள்ளவர்கள், மார்க்கெட் இழந்தவர்கள், நடிப்புலகை விட்டு விலகியவர்கள், முதுபெரும் கலைஞர்களுக்கு இன்று கிடைக்கும் மரியாதை வருத்தப்படும் நிலையில் தான் உள்ளது என்கிறார் சினிமாவை வெகு நாளாக கவனித்து வரும் பத்திரிக்கையாளர் ஒருவர். "இன்றுள்ள கலைஞர்களுக்கு பழைய நடிகர்களை தெரியாது, இன்றுள்ள ஊடகத்தினருக்கும் 90 களுக்கு பின்னால் உள்ள கலைஞர்களையே தெரியாது என்றால் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் அதிகம் உலாவும் 2 கே கிட்ஸ்களுக்கு என்ன தெரியும் யோசித்துக்கொள்ளுங்கள்" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

    கண்டதற்கும் ட்வீட் போடும் பிரபலங்கள்

    கண்டதற்கும் ட்வீட் போடும் பிரபலங்கள்

    மறுபுறம் ட்விட்டர், இன்ஸ்டா சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் பின்பற்றுபவர்களை கொண்டுள்ள திரைப்பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்கள் படம் சம்பந்தமான படங்களை வெளியிடுவது, இயக்குநர்கள், சக கலைஞர்கள் பிறந்தநாளுக்கு ( இதில் பழைய கலைஞர்கள் இருக்க வாய்ப்பே இல்லை) வாழ்த்து பட வெளியீட்டிற்கு விளம்பரம் என கருத்து போடுகிறார்கள். ஆனால் சமீப காலமாக சில விஷயங்கள் நெருடுகிறது.

    பிரபல நடிகையின் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்ல மறந்தவர்கள்

    பிரபல நடிகையின் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்ல மறந்தவர்கள்

    தனது பிரச்சினைகள், மற்ற விஷயங்களுக்கு பதிவு போடும் ஒரு மகா கலைஞர் தன்னுடன் பழகிய மறைந்த நண்பரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல மறந்துபோகிறார். மிகப்பிரபலமான நடிகைக்கு பிரபல இயக்குநருடன் திருமணம், ஆனால் அவரது திருமணத்திற்கு போகத்தான் முடியவில்லை வாழ்த்துகள் குவியும் என்று பார்த்தால் இயக்குநரின் வாடா போடா நண்பரான இயக்குநர் கூட ட்விட்டரில் வாழ்த்து போடவில்லை.

    மீனாவின் கணவரின் மரணம்

    மீனாவின் கணவரின் மரணம்

    ட்விட்டர் என குறிப்பிட காரணம் இவர்கள் தங்கள் எண்ணங்களை நினைவுகளை இதன் வாயிலாகத்தான் ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிவிக்கின்றனர். நேற்று இரு நிகழ்வுகள் நடந்தது. ஒன்று தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 90,2000-களில் முன்னணி நடிகையாக இருந்த மீனாவின் கணவரின் மரணம், மற்றொன்று நடிகர் சூர்யாவின் அடுத்த மைல் கல் ஆஸ்கர் கமிட்டியின் அழைப்பு. அதற்கு வாழ்த்துச் சொன்னவர்கள் சின்னதாக ஒரு இரங்கல் கூட மீனாவுக்கு தெரிவிக்கவில்லை.

    அறிவுரை சொல்பவர்கள் அதன்படி நடக்கவில்லையே

    அறிவுரை சொல்பவர்கள் அதன்படி நடக்கவில்லையே

    எதை நோக்கி நாம் நகர்கிறோம் என்பதை இந்த நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாக்குகிறது. சினிமா போலித்தனமான உறவுகளை கொண்டது என்போர் வாதம் சரியே என்பதா? இதில் இரங்கல் தெரிவிக்காத பலரும் சமூதாயத்தில் எப்படி வாழணும்னு மேடையில் மைக் பிடித்து மக்களுக்கு அறிவுரை சொல்பவர்கள், லட்சக்கணக்கான இளைஞர்கள் இவர்களை பின்பற்றுபவர்களாக உள்ளனர் என விமர்சித்துள்ளனர் நெட்டிசன்கள்.

    நூற்றுக்கணக்கான உதாரணங்கள் கண்முன் உள்ளன

    நூற்றுக்கணக்கான உதாரணங்கள் கண்முன் உள்ளன

    மீனாவுடன் இணைந்து நடித்தவர்கள், பழகியவர்கள், பொதுவாக சக கலைஞராக திரைத்துறையில் மீனாவை மதிப்பவர்கள் இளம் வயதில் அவருக்கு ஏற்பட்ட துன்பத்தில் ஆதரவாக ஒரு இரங்கல் போட நேரமில்லாத அளவுக்கு மனிதாபிமானம் குறையத்தொடங்கி வருகிறது. மீனா நேற்றைய உதாரணம். நேற்று முன் தினம், கடந்த வாரம், கடந்த மாதம் என ஏராளமான உதாரணங்கள் உள்ளன. துக்கத்தில் உதவி என்பதை விட அதற்காக வருத்தம் தெரிவித்து நாலுவரி இரங்கல் போடுவது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

    இரங்கல் தெரிவிக்க மனமில்லை..மரித்துப்போகும் மனிதாபிமானம்

    இரங்கல் தெரிவிக்க மனமில்லை..மரித்துப்போகும் மனிதாபிமானம்

    உள்ளூரிலிருந்து ரஜினிகாந்த் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினார், பல திரைக்கலைஞர்கள் வந்தனர், ஆனால் உள்ளூரிலிருந்தும் நேரில் வர மனமில்லாமல் குறைந்தப்பட்சம் இரங்கல் கூட தெரிவிக்காமல் இருப்பது என்னவகை மனநிலை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு கலைஞனின் வெற்றிக்கு வாழ்த்துச் சொல்லும் மற்றொரு மகா கலைஞர் இரங்கல் தெரிவிக்க மனமில்லாமல் இருப்பதும், அவருக்கு பதில் நன்றி சொல்லும் கலைஞர் அவரும் இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை.

    பண்பாடற்ற செயல் விமர்சிக்கும் நெட்டிசன்கள்

    பண்பாடற்ற செயல் விமர்சிக்கும் நெட்டிசன்கள்

    ரசிகருக்கு வாழ்த்துச் சொல்லும் பிரபலம், உச்ச நடிகர்கள் மீனாவுடன் நடித்தவர்களில் சிலர் தவிர யாருமே கண்டுக்கொள்ளவில்லை என்பது வேதனையான ஒன்று. இவர்களை கேள்விக்கேட்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு ஏனென்றால் ரசிகர்களால்தான் இவர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள், எளிதில் அறிவுரை கூறும் இவர்கள் இதுபோன்ற பண்பாடு இல்லாத செயல்களுக்கு பதில் சொல்லணும் என்கின்றனர் நெட்டிசன்கள்.

    English summary
    It has been criticized that celebrities who post unnecessary things on Twitter are not even saying condolences for the loss of someone in their industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X