என் மனைவி ராத்திரி முழுக்க தூங்கவே இல்லை: வாரிசு நடிகர்
ஹைதராபாத்: பாகமதி படத்தை பார்த்துவிட்டு தன் மனைவி இரவு முழுவதும் தூங்கவில்லை என்று நடிகர் ராம் சரண் தெரிவித்துள்ளார்.
அசோக் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள பாகமதி படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கம் போன்று இந்த படத்திலும் அனுஷ்கா தனது நடிப்பால் ரசிகர்களை மிரட்டியுள்ளார்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தனது மனைவியுடன் சேர்ந்து பாகமதி படத்தை பார்த்துள்ளார். படம் பார்த்த அவர் அது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
நேற்று இரவு பாகமதி படம் பார்த்தேன். அனுஷ்கா அருமையாக நடித்துள்ளார். பாகமதி குழுவுக்கு வாழ்த்துக்கள். படத்தை பார்த்துவிட்டு என் மனைவி நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











