»   »  உங்க வீட்டு வாசலில் தற்கொலை செய்வேன்: பைரவா எடிட்டருக்கு சதிஷ் மிரட்டல்

உங்க வீட்டு வாசலில் தற்கொலை செய்வேன்: பைரவா எடிட்டருக்கு சதிஷ் மிரட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: றெக்க படத்தை போன்று பைரவாவிலும் நான் நடித்துள்ள காட்சிகளை எடிட்டர் பிரவீன் நீக்கினால் அவர் வீட்டு வாசலில் தற்கொலை செய்வேன் என நகைச்சுவை நடிகர் சதிஷ் செல்ல மிரட்டல் விடுத்துள்ளார்.

ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், சதிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள றெக்க படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ரத்தின சிவா, விஜய் சேதுபதி, சதிஷ், கே. எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய சதிஷ் கூறுகையில்,


றெக்க

றெக்க

நான் றெக்க படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறேன். படம் நீளமாக உள்ளது என்று கூறி எடிட்டர் பிரவீன் நான் நடித்த இரண்டு காட்சிகளை நீக்கிவிட்டார்.


பைரவா

பைரவா

றெக்க படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதால் வருத்தம் அடைந்தேன். நான் இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து பைரவா படத்தில் நடித்துள்ளேன். அந்த படத்திற்கும் பிரவீன் தான் எடிட்டர்.


தற்கொலை

தற்கொலை

பைரவாவும் நீளமாக இருக்கிறது என்று கூறி அதிலும் நான் நடித்த காட்சிகளை பிரவீன் நீக்கினால் அவர் வீட்டுக்கு முன்பு தற்கொலை செய்து கொள்வேன் என்று செல்ல மிரட்டல் விடுத்தார் சதிஷ்.


சதிஷ்

சதிஷ்

விஜய் சேதுபதி மாஸ் படங்களில் அடிக்கடி நடிக்க வேண்டும் என்று அவரின் ரசிகனாக அவரின் ரசிகர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று சதிஷ் தெரிவித்தார்.


English summary
Comedian Sathish said in a funny manner that he will commit suicide infront of editor Praveen's house if he cuts his scenes from Bairavaa as he did in Rekka.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil