Bigg Boss Tamil 6: குறும்படம் போட்டு ஷெரினா அவுட்.. அப்போ அடுத்த வாரம் தனலட்சுமி தான் எவிக்டா?
சென்னை: வீட்டுக்குப் போகணும் என பாத்ரூமில் கதறி கதறி அழுத தனலட்சுமி தான் அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவாரா? என்கிற கணிப்பு இப்பவே கிளம்பி உள்ளது.
கடந்த வாரம் ஷெரினா வெளியேறுவதற்கு முந்தைய வாரம் தனலட்சுமி அவரை தள்ளி விடல என்கிற குறும்படத்தை போட்டுக் காட்டி ஷெரினாவை கமல் வெளுத்து வாங்கினார்.
கமலை போர்ட்ரே பண்ணாதீங்க என சொன்ன ஆயிஷா கூட சேவ் ஆன நிலையில், தப்பான கேம் ஆடின ஷெரினா தான் வெளியேறினார். எப்படி கடந்த சீசனில் தாமரையின் காயினை திருடிய சுருதி வெளியேற்றப்பட்டாரோ அப்படியே இந்த சீசனிலும் சேம் சீக்வென்ஸ் அரங்கேறி வருகின்றன.

குறும்படத்தால் ஷெரினா அவுட்
தனலட்சுமி தான் தன்னை தள்ளி விட்டார் என ஷெரினா போட்ட டிராமா பிடிக்காமல் ஷெரினாவுக்கு மக்கள் கொஞ்சம் கூட ஓட்டுக்களே போடவில்லை. கடைசியாக கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மலையாளம் பேசுகிறார் என்கிற ரீதியிலேயே அவர் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார்.

தனாவுக்கு குறும்படம்
இந்நிலையில், இந்த வாரம் தனலட்சுமிக்கு தரமான குறும்படத்தை போட்டதும், தான் செய்த லீலைகள் அம்பலமாகி விட்டது, தன்னை கமல் பாராட்டப் போகிறார் என சோபாவில் இருந்து கீழே எல்லாம் விழுந்து சிரித்துக் கொண்டிருந்த தனலட்சுமியை சட்டென ஒரே செகண்டில் கதறி அழ வைத்து விட்டவர் கமல்ஹாசன்.

பாயாசம் ரெடி
தனாவிடம் இருந்த நாமினேஷன் ஃப்ரீ வாய்ப்பையும் அப்படியே பிடுங்கி விக்ரமனுக்கு கமல் கொடுத்த நிலையில், தனலட்சுமிக்குத்தான் அடுத்த பாயாசம் என கெஸ் பண்ண தோணுகிறது. வழக்கம் போல பலரும் அசீமை நாமினேட் செய்வது போல அதிகளவில் தனலட்சுமியையும் அடுத்த வாரம் நாமினேட் செய்வார்கள். அப்படி செய்தால், தனாவுக்கு மக்கள் ஓட்டுப் போடாமல் வெளியே அனுப்ப நேரிடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

தனாவின் ஆசை
இந்த வாரம் முழுக்க வீட்டுக்குப் போறேன் என அடம்பிடித்துக் கொண்டிருந்த தனலட்சுமி, சன்டே எபிசோடை நினைத்துக் கொண்டே டல் ஆகி வரும் வாரம் விளையாடாமல் போனாமல், அவரது ஆசைப்படியே அடுத்த வாரம் தனாவின் எவிக்ஷன் கார்டு உடன் கமல் வந்து விடுவார் என்கின்றனர்.

எவிக்ட் ஆகக் கூடாது
தனலட்சுமி மிகப்பெரிய ஃபிராடு அவ வெளியே போகணும் என சிலரும், தனலட்சுமி போல அங்கே யாருமே கேம் ஆடுறதில்லை. நிவாஷினி, ஜனனி, குயின்ஸி, மணிகண்டன், கதிரவன், மைனா நந்தினி, ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, ராம் போன்ற போட்டியாளர்களை விட தனலட்சுமி டஃப் ஆன போட்டியாளர் தான் அசீமுக்கு கிடைத்ததை போல ஆயிஷாவுக்கு கிடைத்தது போல தனாவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











