»   »  'திருமதி. பாகுபலி' ஆவாரா அனுஷ்கா?: ரீல் ஜோடி ரியலாகுமா?

'திருமதி. பாகுபலி' ஆவாரா அனுஷ்கா?: ரீல் ஜோடி ரியலாகுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. மேலும் தனது திருமணத்தையும் தள்ளிப் போட்டார்.

பாகுபலி 2 ரிலீஸான பிறகே திருமணம் என்று முடிவு செய்தார்.

பிரபாஸ்

பிரபாஸ்

பிரபாஸை போன்றே அனுஷ்காவும் பாகுபலி 2 முடியும் வரை திருமணம் இல்லை என்று தீர்மானித்தார். பாகுபலி 2 படம் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.

அனுஷ்கா

அனுஷ்கா

பாகுபலி படத்தில் நடிக்கும்போது பிரபாஸ், அனுஷ்கா இடையே நெருக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்களிலும் இருவரும் அருகருகே அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

நிகழ்ச்சிகளில் பிரபாஸ், அனுஷ்காவை அருகருகே பார்த்த ரசிகர்கள் இருவரும் நல்ல ஜோடியாக இருக்கிறார்கள், திருமணம் செய்து ரியல் ஜோடியானால் நன்றாக இருக்குமே என்றார்கள். பிரபாஸ் ரசிகர்கள் அவர்களை ரியல் ஜோடியாக பார்க்க விரும்புகிறார்கள்.

திருமணம்

திருமணம்

ரசிகர்கள் எதிர்பார்ப்பது போன்று பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையே பிரபாஸுக்கு அவர் வீட்டில் பெண் பார்த்துவிட்டதாக வேறு கூறப்படுகிறது.

English summary
It was reported that Prabhas will get married once he finishes the shooting of Baahubali franchise. And when everyone is waiting for the big news, rumours of his closeness with Anushka Shetty aka Devsena of Baahubali is doing the rounds. Not just that their fan clubs have also started discussing their marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil