»   »  ராஜமவுலிக்காக கொள்கையை தளர்த்துவாரா 'அரசியல்வாதி' ரஜினி?

ராஜமவுலிக்காக கொள்கையை தளர்த்துவாரா 'அரசியல்வாதி' ரஜினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலுக்கு வரும் ரஜினிகாந்த் இயக்குனர் ராஜமவுலிக்காக தனது கொள்கையை தளர்ப்பாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனது ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது குறித்து பேசினார். இதையடுத்து அரசியல் கட்சிகளும், ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவரின் நண்பர் ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.

ரஜினி

ரஜினி

ரஜினி அரசியலுக்கு வர உள்ளார். 2.0 படம் மற்றும் ஒரு படத்தை முடித்த பிறகு அவர் சினிமா படங்களில் நடிக்க மாட்டார் என்று அவரின் நெருங்கிய நண்பரான ராஜ்பகதூர் கூறியுள்ளார்.

ராஜமவுலி

ராஜமவுலி

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 உலக அளவில் ரூ. 1,500 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் ராஜமவுலி ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

படம்

படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் எடுப்பது அனைத்து இயக்குனர்களின் கனவு, அதற்கு நான் மட்டும் விதிவிலக்கு அல்ல. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் ரஜினியை வைத்து படம் எடுப்பேன் என்று ராஜமவலி தெரிவித்துள்ளார்.

நடிப்பு

நடிப்பு

ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் நடிக்க மாட்டார் என்கிறார் ராஜ்ரபகதூர். ஆனால் ராஜமவுலிக்காக அவர் தனது கொள்கையை தளர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajinikanth's close friend Raj Bahadur said that superstar will stay away from cinema after entering politics. Will Rajini relax his rule to act in Rajamouli's direction?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil