ரன்வீர் சிங் பேன்ட்டை மீண்டும் கழட்டத் துடிக்கும் பீட்டா.. ஓகே சொல்வாரா அந்த நேக்கட் ஹீரோ!

மும்பை: பேப்பர் மேகஸின் அட்டைப் படத்திற்காக முழு நிர்வாணமாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் போட்டோஷூட் நடத்தினார்.

அதன் புகைப்படங்கள் உலகளவில் டிரெண்டாகின. ரன்வீர் சிங்கின் இந்த செயலை கண்டித்து பாலிவுட்டில் பெரும் போராட்டம் வெடித்தது.

ட்ரோல் மீம்களை கடந்து ரன்வீர் சிங்குக்கு துணி கொடுக்கும் போராட்டங்களும் களைகட்டின. இந்நிலையில், மீண்டும் பீட்டா ரன்வீர் சிங்கிடம் அப்படியொரு கோரிக்கையை வைத்திருக்கிறது.

பாலிவுட்டின் டாப் ஹீரோ

பாலிவுட்டின் டாப் ஹீரோ

நடிகை தீபிகா படுகோன் கணவரும் பாலிவுட் நடிகருமான ரன்வீர் சிங் பாலிவுட்டில் தனது நடிப்பால் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார். 83 படத்தில் கபில் தேவாக வாழ்ந்திருந்தார். ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்த கல்லி பாய் திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ள தேர்வானது. பாலிவுட்டில் டாப் ஹீரோவாக திகழும் ரன்வீர் சிங் சமீபத்தில் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கினார்.

நிர்வாண போட்டோஷூட்

நிர்வாண போட்டோஷூட்

சர்வதேச மேகஸின் ஆன பேப்பர் மேகஸினுக்காக ஒட்டுத் துணி இல்லாமல் முழு நிர்வாணமாக நடிகர் ரன்வீர் சிங் போட்டோஷூட் நடத்தினார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டான நிலையில், ரன்வீர் சிங்கிற்கு பிரச்சனைகளும் சேர்ந்து டிரெண்டாகின. ட்ரோல் மீம்கள், ஆடை கொடுக்கும் போராட்டம், போலீஸில் புகார் என பெரிய சர்ச்சையே வெடித்தது.

பீட்டா கோரிக்கை

பீட்டா கோரிக்கை

அனைத்து மிருகங்களுக்கும் ஒரே மாதிரியான உடல் பாகங்கள் தான் இருக்கின்றன என்பதை வலியுறுத்தியும் வீகனிஸத்தை முன் வைத்தும் அடுத்ததாக பீட்டா வெளியிடப் போகும் விளம்பரத்தில் ரன்வீர் சிங் நடிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தற்போது பீட்டா நிறுவனம் ரன்வீர் சிங்கிடம் முன் வைத்து இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பேன்ட்டை கழட்டப் பார்க்கும் பீட்டா

பேன்ட்டை கழட்டப் பார்க்கும் பீட்டா

விலங்குகளின் நலனுக்காக போராடி வரும் பிரபல நிறுவனமான பீட்டாவுக்காக மீண்டும் தனது பேன்ட்டை கழட்டுவாரா ரன்வீர் சிங் என்று கேட்டப்படியே இப்படியொரு கோரிக்கையை பீட்டா நிறுவனம் வைத்திருப்பது தான் பாலிவுட் ரசிகர்களை பதற வைத்திருக்கிறது. பீட்டாவின் கோரிக்கையை ஏற்று ரன்வீர் சிங் மீண்டும் அப்படியொரு போட்டோஷூட் நடத்துவாரா? இல்லை சர்ச்சைகளை கருத்தில் கொண்டு அதனை தவிர்ப்பாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

பமேலா ஆண்டர்சன் மாதிரி

பமேலா ஆண்டர்சன் மாதிரி

அனைத்து விலங்குகளுக்கும் ஒரே மாதிரியான உடல் பாகங்கள் தான் இருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டும் விதமாக ஏற்கனவே நடிகை பமேலா ஆண்டர்சன் பிகினி உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படமும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. உள்ளாடை மட்டும் அணிந்து ரன்வீர் சிங் பீட்டா விளம்பரத்தில் நடிப்பாரா? அல்லது முற்றும் துறந்து பழையபடியே நடிப்பாரா? என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X