Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மாமன்னன் படத்திற்கு பிறகு உதயநிதி நடிப்பாரா? மாட்டாரா?...அவரே சொன்ன விளக்கம்
சென்னை : மாமன்னன் படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிக்க மாட்டார். அவர் முழு நேர அரசியலில் கவனம் செலுத்த போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வருகிறது. இது உண்மையா, இல்லையா என்பது பற்றி அவரே விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோக்களில் உதயநிதி ஸ்டாலினும் ஒருவராக உள்ளார். டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்த நெஞ்சுக்கு நீதி படத்தில் சமீபத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

உதயநிதி நடிப்பாரா, மாட்டாரா
நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடத்தப்பட்டது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தான் தொடர்ந்து சினிமாக்களில் நடிப்பாரா, மாட்டாரா என்பதற்கு அவரே விளக்கமாக பதிலளித்துள்ளார்.

அவரே சொன்ன விளக்கம்
உதயநிதி பேசுகையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் மாமன்னன் படத்திற்கு பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று பலரும் பேசுகிறார்கள். அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. கதைகள் கேட்டு வருகிறேன். இப்போது என் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படம், மாறன் இயக்கிய கண்ணை நம்பாதே தயாராகி வருகிறது.

மாமன்னன் ரெடியாயிடுச்சா
மாமன்னன் படத்தின் 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்து நல்ல, சமூகத்திற்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதற்கான கதைகளை கேட்டு வருகிறேன். எங்களின் ரெட் ஜெயண்ட் வெளியிட்ட சிவகார்த்திகேயனின் டான், நெஞ்சுக்கு நீதி, கமலின் விக்ரம் ஆகிய படங்கள் நன்றாக ஓடிக் கொண்டு இருக்கிறது. அடுத்து சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

ஆரி மேல செம கோபம்
நெஞ்சுக்கு நீதி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் மயில்சாமி ஸ்பாட்டில் அருமையாக சமைத்துக் கொடுத்தார். முதலில் மகிழ்திருமேனி படத்தில் ஆரியை நடிக்க வைக்க முயற்சித்தோம். அவர் போனை எடுக்கவில்லை. பிக்பாஸ் வெற்றி அடைந்ததால் இப்படியா என்று கோபப்பட்டோம். அவர் வேறு பிரச்சனையில் இருந்ததாக சொன்னார். பின்னர் நெஞ்சுக்கு நீதியில் அவரை நடிக்க வைத்தோம்.

உதயநிதி மனைவியும் நடிக்கிறாரா
ஹீரோயின் தான்யா கேரக்டரில் என் மனைவி கிருத்திகாவை நடிக்க வைக்கலாம் என்று யோசித்ததாக இயக்குநர் சொன்னார். அது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வாறு உதயநிதி பேசினார்.