»   »  வர்லாம் வர்லாம் வா பைரவாவுக்கு நெருப்புடா 'எஃபெக்ட்' கிடைக்குமா?

வர்லாம் வர்லாம் வா பைரவாவுக்கு நெருப்புடா 'எஃபெக்ட்' கிடைக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலியின் நெருப்புடா எஃபெக்ட் பைரவாவின் வர்லாம் வர்லாம் வா பாடலுக்கும் கிடைக்குமா?

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் டீஸர் தீபாவளி விருந்தாக நேற்று இரவு வெளியிடப்பட்டது. டீஸரை பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.


Will Varlam Varlam Bairavaa get Neruppuda effect?

டீஸரில் விஜய் பேசும் பன்ச் வசனங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அதிலும் விளையாடலாமா என்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


ரஜினியின் கபாலி படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நெருப்புடா பாடல் பட்டி தொட்டியெல்லாம் நெருப்பாய் பரவி ஹிட்டானது. அந்த பாடலை பாடிய அருண் காமராஜ் பைரவா படத்தில் வர்லாம் வர்லாம் வா பைரவா பாடலை நெருப்பு மாதிரி பாடியுள்ளார்.


டீஸரில் தெறிக்கும் பாடல் வரிகள் இது தான்,


யார்ரா யார்ரா இவன் ஊர கேட்டா தெரியும்


பார்ரா முன்ன வந்து நின்னு பார்ரா புரியும்


வர்லாம் வர்லாம் வா பைரவா


கபாலியை போன்றே பைரவாவுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ளார். நெருப்புடா எஃபெக்ட் வர்லாம் வர்லாம் பாடலுக்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Will Varlam Varlam Vaa Bairavaa get Neruppuda effect? Interestingly the singer and the music composer of the song are same as Neruppuda.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil