தல–தளபதி போட்டோ ப்ளீஸ்...விஜய் –அஜித் சந்திப்பு நடக்குமா... உச்சகட்ட ஆர்வத்தில் ரசிகர்கள்
சென்னை : சமீப ஆண்டுகளாக படங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் அஜித்தும் - விஜய்யும் எப்போதாவது சந்தித்து கொள்வார்களா, அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோ வெளிவருமா என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள்.
விஜய் - அஜித் ரசிகர்கள் பல காலமாக பகையாளிகளை போல் சண்டை போட்டு வருவது அனைவருக்குமே தெரியும். இவர் படம் வந்தால் அவரின் ரசிகர்கள் ட்ரோல் பண்ணுவதும், அவரின் படம் ரிலீசானால் இவரின் ரசிகர்கள் கழுவி ஊற்றுவதும் வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக ரசிகர்களின் மனங்களில் மாற்றம் வந்திருப்பதை காண முடிகிறது.

அட இது கூட நல்லா இருக்கே
சமீபத்தில் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரை புகழ்ந்து அஜித் ரசிகர்கள் பகிர்ந்த தகவல்களுக்கு நெகடிவ் கமெண்ட்கள் வரவில்லை. இது தமிழ் சினிமாவில் நல்ல மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் விஜய் - அஜித் இருவரும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் என பலரும் கூறி வருகின்றனர். அஜித் பிறந்தநாளன்று கூட, விஜய்யும் அஜித்தும் ஒன்றாக ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி செம டிரெண்டிங்கானது.

மங்காத்தா 2 எப்போ எடுப்பீங்க
டைரக்டர் வெங்கட் பிரபுவும் தனது பங்கிற்கு, தான் முதலில் மங்காத்தா 2 படம் எடுக்க முடிவு செய்த போது விஜய்யை தான் வில்லனாக நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் அவரின் கால்ஷீட் கிடைக்காததால் மங்காத்தா 2 எடுக்க முடியவில்லை. எப்படி இருந்தாலும் விஜய், அஜித் இருவரையும் வைத்து தான் மங்காத்தா 2 படத்தை இயக்குவேன் என்று கல்லூரி விழா ஒன்றில் பேசி உள்ளார். இதனால் அது எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர்.

விஜய்-அஜித் சந்திப்பார்களா
இதற்கிடையில் விஜய், அஜித் இருவருமே ஒரே இடத்தில் சந்தித்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிறது. இருவருமே தங்களின் அடுத்தடுத்த படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்கள். தற்போது இருவரும் தமிழ் சினிமாவில் வளர்ந்து உச்சநட்சத்திரங்கள் ஆகி விட்டனர். இப்போது அவர்களின் சந்திப்பு நடக்குமா என்பது தான் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
Recommended Video

ஐதராபாத்தில் விஜய்-அஜித் ஷுட்டிங்
இதற்கு காரணம் அஜித் தற்போது நடித்து வரும் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் கடந்த ஒரு மாதமாக ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங்கிற்காக விஜய்யும் ஐதராபாத் சென்றுள்ளார். ஆனால் தளபதி 66 ஷுட்டிங் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த இரண்டு ஸ்டார்களும் ஐதராபாத்தில் சந்தித்து கொள்வார்களா, இவர்கள் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ வெளியே வருமா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











