பீஸ்ட் முதல் நாள் வசூலை முறியடிக்குமா கமலின் விக்ரம்...எகிறும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சென்னை : விக்ரம் படம் நாளை ரிலீசாக உள்ளது என்பதை விடவும், ஓப்பனிங் நாளில் விக்ரம் படம் வசூல் சாதனை படைக்குமா. அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற பெருமையை விக்ரம் பெறுமா என்பது தான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Recommended Video
கமலின் விக்ரம் படம் எப்போது ரிலீசாகும் என ஆவலாக காத்திருந்த ரசிகர்களின் ஆசை நிறைவேறும் அந்த நாள் வந்து விட்டது. நாளை விக்ரம் படம் உலகம் முழுவதும் 4 மொழிகளில் 5000 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்த படம் பற்றி வெளியாகும் தகவல்கள், ப்ரொமோஷன் வேலைகள் என அனைத்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

ப்ரீ ரிலீஸ் புக்கிங்கே இத்தனை கோடியா
விக்ரம் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ப்ரீ ரிலீஸ் புக்கிங்கிலேயே 200 கோடி வசூல் செய்துள்ள விக்ரம் படத்தின் டிக்கெட்கள் பெரும்பாலான தியேட்டர்களில் விற்று தீர்ந்து விட்டன. அடுத்த ஒரு வாரத்திற்கு விக்ரம் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ள பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் ஆகி விட்டன. இதனால் நிச்சயம் முதல் நாளில் விக்ரம் படம் வசூல் சாதனை படைக்கும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

எப்படி 500 கோடி வரும்
ப்ரீம் ரிலீஸ் டிக்கெட் விற்பனையில் 200 கோடி, கமலுக்காக 100 கோடி, சூர்யாவிற்காக 100 கோடி, லோகேஷ் கனகராஜிற்காக 100 கோடி கண்டிப்பாக வரும். எப்படி பார்த்தாலும் விக்ரமின் முதல் நாள் வசூல் 500 கோடியை தாண்டும் என்பது பலரின் கணிப்பாக உள்ளது. இதற்கிடையில் இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த பீஸ்ட் படத்தின் முதல் நாள் சாதனையை விக்ரம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

பீஸ்ட் வசூலை முந்துமா
இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் அஜித்தின் வலிமை தான். ஆனால் முதல் நாள் வசூல் செய்த படம் என்று பார்த்தால், விஜய்யின் பீஸ்ட் படம் தான். வலிமை படத்தின் ஓப்பனிங் வசூல் 36.6 கோடி. ஆனால் தமிழ்நாட்டில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் 35.71 கோடி. இந்த ஆண்டில் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த படங்களாக இருப்பது கேஜிஎஃப் 2, டான், ஆர்ஆர்ஆர், வலிமை, பீஸ்ட்.

கமலின் அதிக வசூல் படம் இதுவா
பொதுவாக கமல் படம் என்றால் அதிக வசூல் வரும். இதுவரை கமல் நடித்த படங்களின் முதல் நாள் வசூல் 15 முதல் 20 கோடி தான் இருந்துள்ளது. இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த பீஸ்ட் படத்தின் வசூலை விக்ரம் நிச்சயம் முறியடிக்கும் என அனைவரும் சொல்லி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











