»   »  பெண்கள் சங்கங்களுக்கு எதிராக இணைந்த ஆதிக் சிம்பு?

பெண்கள் சங்கங்களுக்கு எதிராக இணைந்த ஆதிக் சிம்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் சிம்பு தன்னுடைய வேலையை தொடங்கிவிட்டார்.

சிம்பு தற்போது த்ரிஷா இல்லனா நயன் தாரா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்துவருகிறார். அப்பா, இரண்டு மகன்கள் என்று மூன்று கேரக்டர்களில் சிம்பு நடிக்கிறார்.

Women organisations to protest against Simbu movie

இதில் அப்பாவும் ஒரு மகனும் நல்லவர்கள். இன்னொரு மகன் மட்டும் கெட்டவர். வில்லனான அந்த கேரக்டர் பெண்களை மதிக்காத ஒரு கேரக்டராம். அந்த கேரக்டருக்கு அறிவுரை சொல்லும்படி மற்ற இரண்டு கேரக்டர்கள் இருக்குமாம்.

த்ரிஷா இல்லனா நயன்தாராவிலேயே பெண்களை இழிவுபடுத்தி டயலாக்குகள் வைத்தார் ஆதிக். அவர் இதில் அதற்காகவே ஒரு கேரக்டரை உருவாக்கி இருப்பதுபெண்கள் சங்கங்களை இன்னும் எரிச்சல்படுத்தும்.

அது மட்டுமில்லாமல் தன்னை எதிர்த்த பெண்கள் சங்கம் தான் சிம்புவையும் பீப் பாடலுக்காக வெளுத்து வாங்கியது. எனவே பெண்கள் சங்கங்களை காய்ச்சும் அளவுக்கு இந்த படத்தில் ஸீன்களும் டயலாக்குகளும் வைத்திருக்கிறாராம் ஆதிக்.

படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணியே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டாராம் சிம்பு. அன்றுதான் விஜய் படமும் ரிலீஸாகிறது. இதேபோல் தான் முன்பு துப்பாக்கியோடு தன்னுடைய போடா போடியை மோதவிட்டார் சிம்பு.

இந்த வாரம் சென்னையில் தொடங்க வேண்டிய ஷூட்டிங் சிம்புவால் தள்ளிப்போயிருக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்துக்கு இந்த ஷெட்யூல் தள்ளிப்போனதால் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டியதும் தள்ளிப்போய்விட்டதாம்.

இப்படி பண்ணினா எப்படி பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுவீங்க சிம்பு?

English summary
Sources say that Simbu is adamant in releasing his AAA novie on Pongal Day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil