அப்படி போடு...கொல மாஸா வந்த தலைவர் 169 அப்டேட் ...எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை : ரஜினியின் தலைவர் 169 படத்தை இன்னும் துவக்கவில்லை என ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி வரை பக்காவாக முடிவு செய்து வைத்திருக்கிறதாம் படக்குழு.

தலைவர் 169 பற்றி லேட்டஸ்டாக வெளியாகி உள்ள தகவல் ரஜினி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. எப்போது ஷுட்டிங் துவங்கும், அடுத்த அப்டேட் எப்போது வரும் என இப்போதே கேட்க துவங்கி விட்டனர். தலைவர் 169 க்கு இப்படி ஒரு பிளானை எதிர்பார்க்கவில்லையே என ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி – சன் பிக்சர்ஸ் கூட்டணி

ரஜினி – சன் பிக்சர்ஸ் கூட்டணி

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தையும் தாங்களே தயாரிக்க உள்ளதாக பிப்ரவரி மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது சன் பிக்சர்ஸ். தலைவர் 169 ல் ரஜினியை அடுத்து இயக்க போகிறவர் என பல டைரக்டர்களின் பெயர்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் இந்த படத்தை இயக்க போகிறார் என்றும், அனிருத் இசையமைக்கிறார் என்றும் சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

என்னது ரம்யா கிருஷ்ணன் வில்லியா

என்னது ரம்யா கிருஷ்ணன் வில்லியா

அதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாத நிலையில், படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என கூறப்பட்டது. வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார், பிரியங்கா அருள்மோகன் ரஜினியின் மகள் ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. பிறகு ரம்யா கிருஷ்ணன், வில்லி கிடையாது. அதே சமயம் மிக முக்கிய ரோலில் நடிக்கிறார் என கூறப்பட்டது.

தலைவர் 169 ஷுட்டிங் எப்போ

தலைவர் 169 ஷுட்டிங் எப்போ

ரஜினி விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதால், அவர் இந்தியா திரும்பியதும் ஆகஸ்ட் மாதம் தலைவர் 169 ஷுட்டிங் துவங்கப்பட்டு, 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என கூறப்பட்டது. இந்த படத்தில் வில்லன் ரோலில் நடிக்க கன்னட நடிகர் சிவ ராஜ்குமாரிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

ரிலீஸ் அப்டேட்டே வந்தாச்சா

ரிலீஸ் அப்டேட்டே வந்தாச்சா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, தலைவர் 169 ஷுட்டிங் ஜுலை மாத மத்தியிலேயே துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ம் தேதி தலைவர் 169 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட உள்ளதாம். தலைவர் 169 படத்தை 2023 ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ஏப்ரல் 14 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X