»   »  யட்சன்: காமெடி தூக்கல்... ரொமான்ஸ் குறைவு

யட்சன்: காமெடி தூக்கல்... ரொமான்ஸ் குறைவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி மற்றும் ஸ்வாதி ரெட்டி ஆகியோரின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் யட்சன் திரைப்படம், நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சுபாவின் எழுத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இக்கதையை துணிந்து திரைப்படமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்த்தன்.


320 திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கும் யட்சனில் ஆர்யா அஜீத் ரசிகராக நடித்திருக்கிறார், எனவே படத்திற்கு அஜீத் ரசிகர்கள் தங்கள் ஆதரவை அளித்திருக்கின்றனர்.


படத்தை ஒருமுறை பார்க்கலாம் ஆனால் காமெடி தூக்கலாக இருக்கும் இந்தப் படத்தில் ரொமான்ஸ் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


யட்சன் படத்தைப் பற்றிய ரசிகர்களின் ஒருசில பதிவுகளை இங்கே காணலாம்.


ஏன்டா அடிச்ச

யட்சன் படத்தில் இந்தக் காட்சியை தான் மிகவும் ரசித்ததாக தில்வாலே கதிர் கூறியிருக்கிறார் வில்லன்: என் ஆளுன்னு தெரிஞ்சும் ஏன் டா அடிச்ச??
ஆர்யா: தல படத்தோட டிக்கெட்ட கிழிச்சான் ஆதான் அடிச்சேன்.
காமெடி அதிகம் காதல் குறைவு

"ஆர்யா, கிருஷ்ணா இருவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கின்றனர். காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் காதல் காட்சிகள் சற்று குறைவாகவே உள்ளன" என்று வருத்தபட்டிருக்கிறார் அர்சாத் பாட்ஷா.


யுவனின் இசை சூப்பர்

யுவனின் இசை யட்சன் படத்தை தூக்கிப் பிடித்திருக்கிறது. முன்னணி நடிகர்கள் நன்றாக நடித்திருகின்றனர், திரைக்கதையும் சூப்பர். மொத்தத்தில் யட்சன் ஒரு நிமிடம் கூட போரடிக்கவில்லை" என்று படத்தைப் பாராட்டியிருக்கிறார் முகம்மது ஆரிப்.


தூத்துக்குடி - பழனி

யட்சன் தூத்துக்குடி மற்றும் பழனி ஆகிய இரண்டு நகரங்களை கதைக்களமாக கொண்டு வெளியாகியுள்ளது என்று கூறியிருக்கிறார் சரவணன்.


English summary
Arya and Kreshna starrer "Yatchan" has been released Today - Audience Live Response.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil