twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுருட்டிப்போட்ட கொரோனா.. திக்குமுக்காடிய அரசு.. 2020ல் நிதியை வாரி வழங்கிய டாப் கோலிவுட் நடிகர்கள்!

    |

    சென்னை: 2020ஆம் ஆண்டில் கொரோனா மிரட்டிய நிலையில் தடுப்பு நடவடிக்கை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தவர்களுக்கு கோலிவுட் நடிகர்கள் நிதியை வாரி வழங்கினர்.

    2020 ஆம் ஆண்டு மக்களுக்கு ஒரு மோசமான ஆண்டாகவே அமைந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று வேகமாக பரவிய நிலையில் மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

    அந்த வகையில் பொது முடக்கத்தை அறிவித்ததால் தொழில்துறை முற்றிலும் முடங்கியது. மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாயினர்.

    அரசுகள் கோரிக்கை

    அரசுகள் கோரிக்கை

    இதனை தொடர்ந்து அந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க நிதி உதவி அளிக்குமாறு மக்களிடம் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்தன. அதற்கேற்ப கொரோனா தடுப்பு பணிகளுக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்தனர்.

    ரஜினி நிதியுதவி

    ரஜினி நிதியுதவி

    அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ஹரிஷ் கல்யான் வரை அனைவரும் நிதியுதவியை வாரி வழங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.

    நடிகர் அஜித்

    நடிகர் அஜித்

    நடிகர் அஜித் தொழிலாளர்களுக்காக ரூபாய் 25 லட்சத்தை கொடுத்துள்ளார் . பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50லட்சம், பெஃப்சிக்கு 25 லட்சமும், அஜித் பி.ஆர்.ஓ யூனியனுக்கு 2.5லட்சமும் தமிழக ஊடக யூனியனுக்கு 5 லட்சம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 32ரை லட்சம் கொடுத்தார் நடிகர் அஜித்.

    நடிகர் விஜய்

    நடிகர் விஜய்

    நடிகர் விஜய், கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1.30 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சிக்கு ரூ. 25 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக அளித்தார். அண்டை மாநிலங்களான கேரளாவுக்கு ரூ. 10 லட்சம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்தார்.

    நடிகர் ராகவா லாரன்ஸ்

    நடிகர் ராகவா லாரன்ஸ்

    நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதில், அதில் பிரதமர் நிவாரண நிதி உதவியாக ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் படப்பிடிப்பு ரத்தால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம், நடன இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், வாழ்வாதாரத்தை இழந்துவாடும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி உதவி அறிவித்தார்.

    Recommended Video

    2020 HIGHEST EARNING CELEBRITIES | REWIND RAJA EP-31 | FILMIBEAT TAMIL
    தமிழ் நடிகர்கள்

    தமிழ் நடிகர்கள்

    நடிகர் தனுஷ் 15 லட்சம் ரூபாய் சினிமா தொழிலாளர்களுக்கு வழங்கினார். சூர்யா, சிவகுமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் தலா 10 லட்சம் ரூபாய் நிதியாக அளித்தனர். நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதி கொடுத்தார்.

    Read more about: year ender 2020
    English summary
    Year end: Top actors of Tamil cinema donated for Corona virus relief fund. From Rajinikanth to Harish Kalyan donated huge amount Tamil cinema workers and govt.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X