»   »  என்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா?

என்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னை அறிந்தால் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து ஒருவழியாக ஓய்ந்துள்ளன.

இப்போது படத்தின் பிஸினஸ் பற்றி பலரும் பலவிதமாக எழுத ஆரம்பித்துள்ளனர். சிலர் படம் பிரமாதமான வெற்றி என்றும், சிலர் அப்படியெல்லாம் இல்லை... சராசரிதான் என்றும் கூறி வருகின்றனர்.


தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் இதுபற்றி எதுவும் கூறாமல் அமைதி காக்கிறார். அவர் எப்போதுமே அப்படித்தான். பெரிய வெற்றி என்றாலும், தோல்வி என்றாலும் மவுனம்தான் அவர் பதில்.


Yennai Arinthaal goes well in Tamil Nadu

சரி படம் உண்மையில் எப்படிப் போகிறது?


நன்றாகவே ஓடுகிறது. வசூலும் திருப்தியாக உள்ளது.


என்னை அறிந்தால் படம், வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில் ரூ 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது மொத்தமாக. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ 40 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது, இது உண்மையிலேயே நல்ல வசூல்தான். வரி போக ரூ 28 கோடி வரை கிடைத்திருக்கிறது. பிற மாநிலங்களில் கேரளா, கர்நாடகாவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.


சர்வதேச அளவில் அமெரிக்காவில் 4 லட்சம் டாலருக்கு மேல் வசூலித்துள்ளது இந்தப் படம். மொத்தமாக ரூ 60 கோடிக்கும் மேல் வசூலித்து, டீசன்டான வெற்றியைப் பெற்றுள்ளது என்னை அறிந்தால்.


தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் சந்தோஷமாக அஜீத்தின் அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.

English summary
Ajith's Yennai Arindhaal is holding well at the box office with the over all collection of Rs 60 cr.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil