»   »  'என்னடா, என்னை போல் டிரெஸ் போட்டு கிண்டல் பண்றியா?'- பிரேம்ஜியிடம் கோபித்த இளையராஜா

'என்னடா, என்னை போல் டிரெஸ் போட்டு கிண்டல் பண்றியா?'- பிரேம்ஜியிடம் கோபித்த இளையராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

அச்சமின்றி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய பிரேம்ஜி, இசையமைப்பது தொடர்பாக தன் பெரியப்பா இளையராஜாவுடன் தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

பிரேம்ஜி பேசியதாவது:

விஜய் வசந்த் ஹீரோவாகவும், வினோத்குமார் தயாரிப்பாளராகவும் ஒரு படம் எடுக்க போகிறோம் என்று சொல்லும்போதே நான்தான் அந்த படத்திற்கு இசையமைப்பேன் என்று சொல்லிவிட்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் எடுத்த இரண்டு படத்திற்கும் நான்தான் இசையமைத்தேன். இனி அவர்கள் எடுக்க போகும் படங்களுக்கும் நான்தான் இசையமைப்பேன். இது எங்களுக்குள் வாய் வார்த்தையில் போட்டுக் கொண்ட ஒப்பந்தம்.

Yes, I copied Ilaiyaraaja music - Premji

என்னுடைய இசையில் வெளிவந்த பாடல்களை நான் காப்பியடித்து போட்டிருக்கிறேன் என்று பலர் பேசிக் கொன்டிருக்கிறார்கள். ஆமாம் நான் காப்பியடித்துதான் போட்டுக்கொண்டு கொண்டிருக்கிறேன். எனது பெரியப்பா (இளையராஜா ) இசையமைத்த பாடல்களைத் தான் மாற்றி போட்டுக் கொண்டிருக்கிறேன். வேறு யாருடைய இசையில் வெளிவந்த பாடல்களையும் நான் திருடவில்லை. எங்கள் குடும்ப சொத்தான (இளையராஜா) இசையிலிருந்து தான் திருடிப் போடுகிறேன். எல்லோருமே அவருடைய இசையிலிருந்து யார் யாரோ எடுத்து மாற்றி பாடல்களை போடுகிறார்கள்... நான் எடுத்துப் போடக் கூடாதா ?

என்னிடம் இயக்குநர்கள் நீங்கள் இளையராஜா போன்று இனிமையான ட்யூன் போட்டு தர வேண்டும் என்று கேட்பார்கள். நான் அவரைப் போன்று டியூன் போட முடியாது. அவரைப் போன்று டிரெஸ் மட்டும்தான் போட்டுக் காட்ட முடியும். சொன்னபடி ஒருநாள் வெள்ளை ஜிப்பா, வேஷ்டி போட்டுக்கொண்டு ருத்ராட்ச மாலைகளையும் மாற்றிக்கொண்டு ஆர்மோனியப் பெட்டியுடன் போஸ் கொடுத்தேன். அதை போஸ்டர் அடித்து எல்லா இடங்களிலும் ஒட்டினார்கள். பெரியப்பா வீட்டு வாசலிலும் ஒட்டிவிட்டார்கள். பெரியப்பா கூப்பிட்டுப் பேசினார்.. 'என்னடா என்னை போல் டிரெஸ் போட்டு கிண்டல் பன்றியா?' என்று கேட்டார். அதற்கு நான், 'இல்லை பெரியப்பா உங்களைப் போல இசையமைக்க சொன்னார்கள்... அது என்னால் முடியாது, வேண்டுமானால் அவரைப் போல டிரெஸ் போட்டு போஸ் கொடுக்கிறேன்' என்று சொன்னேன். அதைதான் போஸ்டர் போட்டு ஒட்டிவிட்டார்கள் என்று சொன்னேன்," என்றார்.

விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், "பிரேம்ஜி உன்னமையாகவே திறமைசாலி. அவனுக்குள் இசையாற்றல் இருக்கிறது. இசை எங்க குடும்பத்தின் ரத்தத்தில் இருக்கிறது. அதுதான் அவனுக்குள் இருந்து வெளி வருகிறது. பிரேம்ஜி நான் இசையமைத்த பாடல்களுக்கு என்னுடன் பணியாற்றி இருக்கிறான். அவன் இசையமைக்கிறான், நடிக்கிறான் இதில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்து என்றேன். அதற்கு அவன் என்னை அதிகமாக நடிக்கத்தான் கூப்பிடுகிறார்கள் என்றான். எது உனக்கு வருகிறதோ, விருப்பமாக இருக்கிறதோ அதில் அதிகமாக கவனம் செலுத்து. அப்பொழுது தான் நீ வெற்றி பெற முடியும் என்று சொன்னேன்," என்றார்.

பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில், "இந்த படத்தின் எல்லா பாடல்களையும் எழுதி இருக்கிறேன். இயக்குனர் ராஜபாண்டி சமூக அக்கறை கொண்டவர். அவரது படங்கள் நல்ல கருத்துக்களை சொல்லக் கூடியதாக இருக்கிறது. நிச்சயம் ஒரு பெரிய இயக்குநராக வருவார். இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் சம்பளத்தை அளந்துதான் தருகிறார். விஜய் வசந்த் இயல்பான நடிப்பாற்றல் கொண்டவர். நிச்சயம் அவருக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது," என்றார்.

அச்சமின்றி படத்தை ட்ரிபிள்வி ரிக்கார்ட்ஸ் சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். ராஜபாண்டி இயக்கியுள்ளார்.

English summary
Actor - Musician Premji says that he is copying Maestro Ilaiyaraaja's music.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil