»   »  த்ரிஷா பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் தான்: உண்மை பேசிய தாய் உமா

த்ரிஷா பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் தான்: உண்மை பேசிய தாய் உமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் மகள் பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தது உண்மை தான் என நடிகை த்ரிஷாவின் தாய் உமா தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பின் ஆதரவாளரான த்ரிஷாவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ட்விட்டரை விட்டே வெளியேறினார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தால் அவரின் படப்பிடிப்புக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இது குறித்து த்ரிஷாவின் தாய் உமா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பீட்டா

பீட்டா

த்ரிஷா பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தது உண்மை தான். வெளிநாட்டு நாய்கள் அல்லாமல் உள்நாட்டு நாய்களையே மக்கள் வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர் பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

நாய்கள்

நாய்கள்

பள்ளி நாட்களில் இருந்தே இதை த்ரிஷா தெரிவித்து வருகிறார். பீட்டாவின் மூலம் அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எதுவும் கூறவில்லை. தனிப்பட்ட முறையிலேயே அவர் நாய்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

தமிழர்கள்

தமிழர்கள்

நாங்களும் தமிழர்களே. எங்களுக்கு மட்டும் தமிழ் உணர்வு இல்லாமல் போகுமா? கடந்த 6, 7 ஆண்டுகளாக அவர் பீட்டா விஷயத்தில் ஆர்வம் காட்டுவது இல்லை.

ட்விட்டர்

ட்விட்டர்

த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக தெரிவிக்கப்பட்டிருந்த கருத்தால் பெரும் பிரச்சனையாகி உள்ளது. அந்த கருத்தை த்ரிஷா தெரிவிக்கவில்லை ஹேக்கர்களின் வேலை என்றார் உமா.

English summary
Trisha's mother Uma said that her daughter once supported PETA for a good cause and never has the intention to oppose Jallikattu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil