»   »  சிம்புவுக்கு "மாமா".. விஜய்க்கு "பாஸ்".. இது ஒய்.ஜி.மகேந்திரனின் புது அவதாரம்!

சிம்புவுக்கு "மாமா".. விஜய்க்கு "பாஸ்".. இது ஒய்.ஜி.மகேந்திரனின் புது அவதாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'விஜய் 60' படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் விஜய்யின் பாஸ் ஆக நடிக்கிறார்.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் விஜய் 60. இந்த படத்தில் விஜய்யின் பாஸ் ஆக நடிக்கிறார் ஒய்.ஜி. மகேந்திரன். மேலும் ஆக்ஷன் காட்சிகளிலும் கூட வருகிறாராம்.

இது குறித்து ஒய்.ஜி. கூறுகையில்,

பாஸ்

பாஸ்

விஜய் 60 படத்தில் நான் ஹீரோவின் பாஸ் ஆக வருகிறேன். எனக்கு விஜய்யை குழந்தை பருவத்தில் இருந்தே தெரியும். அவருடன் நடிப்பதில் பெருமையாக உள்ளது. எனக்கு இன்னும் மூன்று நாள் படப்பிடிப்பு தான் பாக்கி உள்ளது. நான் ஆக்ஷன் காட்சியிலும் வருகிறேன்.

காமெடி

காமெடி

சிம்பு படத்தில் நான் காமெடி செய்கிறேன். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் ஸ்ரேயாவின் தந்தையாக நடிக்கிறேன். என் பகுதியை நடித்துக் கொடுத்துவிட்டேன்.

சிம்பு

சிம்பு

படத்தில் நான் பெரும்பாலும் சிம்பு மற்றும் விடிவி கணேஷுடன் தான் வருவேன். சிம்பு மிகவும் திறமையானவர். அவர் சொல்லித் தான் என்னை படத்தில் நடிக்க வைத்ததாக கேள்விப்பட்டேன்.

தலைவா

தலைவா

முன்னதாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த தலைவா படத்திலும் ஒய்.ஜி. மகேந்திரன் நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் விஜய்யுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
YG Mahendran is acting as Vijay's boss in the upcoming movie Vijay 60. He is also a part of action sequences.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil