»   »  பாலியல் தொல்லை கொடுத்தவனை ஃபேஸ்புக்கில் போட்டோ போட்டு அசிங்கப்படுத்திய நடிகை

பாலியல் தொல்லை கொடுத்தவனை ஃபேஸ்புக்கில் போட்டோ போட்டு அசிங்கப்படுத்திய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கயவனை ஃபேஸ்புக்கில் அம்பலப்படுத்தி தக்க தண்டனை அளித்துள்ளார் நடிகை துர்கா கிருஷ்ணா.

நடனக் கலைஞரான கேரளாவை சேர்ந்த துர்கா கிருஷ்ணா மலையாள படங்களில் நடித்து வருகிறார். விமானம் மலையாள படத்தில் ப்ரித்விராஜ் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் துர்கா.

தனக்கு ஆபாச வீடியோ அனுப்பவியனின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது,

சகோதரர்கள்

சகோதரர்கள்

நான் கோழிக்கோட்டை சேர்ந்த துர்கா கிருஷ்ணா. என் சகோதர சகோதரிகளே நானும் உங்களில் ஒருத்தி. உங்களில் எத்தனை பேர் உண்மை சகோதரர்கள் என்பது தெரியவில்லை.

நரி

நரி

உங்களில் எத்தனை பேர் நரிகள். அதாவது பகலில் நல்லவர்கள் போன்றும், இரவானால் செக்ஸ் ஆசையை வெளிப்படுத்தி உண்மை நிறத்தை காட்டுபவர்கள் என்றும் தெரியவில்லை.

மனைவி

மனைவி

அத்தகைய நரிகளுக்கு மனைவி, சகோதரி, தாய், 2 வயது குழந்தை அல்லது 70 வயது பாட்டி என்று அடையாளம் தெரியாது. அவர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள் அனுப்பி தங்களின் செக்ஸ் ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு வயது, உறவு எல்லாம் முக்கியம் இல்லை எதிர்பாலினம் தான் முக்கியம்.

மெசேஜ் பாக்ஸ்

மெசேஜ் பாக்ஸ்

அசிங்கமான சம்பவம் ஒன்று நடந்தது. ஒருவன் என் மெசேஜ் பாக்ஸில் அசிங்கமான வீடியோக்களை அனுப்பினான். நான் தைரியமான பெண். நீ என்னை பாலியல் தொல்லைக்குட்படுத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்வில் நான் உண்மையான சகோதரர்களை பார்த்துள்ளேன். அதனால் உன்னை போன்றவனை கண்டுபிடிக்க முடியும்.

நடவடிக்கை

என் சகோதரர்களுக்கு ஒரு கோரிக்கை. உங்களின் சகோதரிகளை சைக்கோக்களிடம் இருந்து காப்பாற்ற உடனே நடவடிக்கை எடுங்கள். இது போன்றவர்களை தண்டிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள அரசிடம் மனு அளிக்க வேண்டும். கல்வி முறையிலே இது போன்ற விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாம் இன்று மாற்றத்தை கொண்டு வந்தால் எதிர்காலத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்காது.

English summary
Actress Durga Krishna has exposed the pervert who sent lewd messages and video to her via Facebook.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil