»   »  பாகுபலி போஸ்டர்கள்... அட, இது 'திருவண்ணாமலை அர்ஜூன்' டிசைனாச்சே!

பாகுபலி போஸ்டர்கள்... அட, இது 'திருவண்ணாமலை அர்ஜூன்' டிசைனாச்சே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சோஷியல் மீடியா எனும் சமூக வலைத் தளங்கள் வந்த பிறகு, படைப்பாளிகள் குறிப்பாக சினிமாக்காரர்களின் ஒவ்வொரு படைப்பின் மூலமும் எங்கிருந்து சுடப்படுகிறது என்பதை உடனுக்குடன் வெட்ட வெளிச்சமாக்கிவிடுகிறார்கள்.

ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பாகுபலி. தமிழில் மகாபலி என்ற பெயரில் வெளியாகிறது.

இதன் முதல் மற்றும் இரண்டாம் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின. இரண்டுமே ஏற்கெனவே வெளியான சில டிசைன்களை ஒத்திருப்பதாக சமூக வலைத் தளங்களில் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

எதிர்ப்பார்ப்பு

எதிர்ப்பார்ப்பு

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை ராஜமௌலி இரண்டு வருடத்திற்கும் மேலாக எடுத்து வருகிறார்.

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக்

இந்நிலையில் பாகுபலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் தண்ணீரின் மேல் குழந்தை ஒன்றை கை தாங்குவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது.

ஹாலிவுட் காப்பி

ஹாலிவுட் காப்பி

ஆனால் தற்போது இந்தப் போஸ்டர் சர்ச்சையில் கிக்கியுள்ளது. 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான சைமன் பிரிச் படத்தின் போஸ்டர் போலவே பாகுபலி போஸ்டரும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அடுத்த அதிர்ச்சி...

அடுத்த அதிர்ச்சி...

படத்தின் இரண்டாவது போஸ்டர் நேற்று வெளியிட்டிருந்தனர். அதில் ஒரு பெரிய சிவலிங்கத்தை பிரபாஸ் தூக்கி வருவதைப் போல காட்சி இருந்தது. இந்தப் போஸ்டரும் சர்ச்சைக்கு தப்பவில்லை. காரணம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ்ப் படமான திருவண்ணாமலையில் அர்ஜூன் இதே போல பெரிய சிவலிங்கத்தைத் தூக்கிக் கொண்டு வருவது போல போஸ்டர் வெளியானது நினைவிருக்கலாம்.

கிண்டல்

கிண்டல்

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... என்ற கேப்ஷனோடு இந்த இரு போஸ்டர்களையும் கிண்டலடித்து எழுத ஆரம்பித்துவிட்டனர் மவுஸ் பிடிக்கத் தெரிந்த அனைவரும்!

English summary
SS Rajamouli's Bahubali posters are come under plagiarism criticism.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil