Don't Miss!
- News
நான் வீட்டில் இல்லாத போது என் மகள்களிடம் டான்ஸர் ரமேஷ் எப்படி நடந்து கொண்டார்? இன்பவள்ளி பேட்டி
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Finance
புதிய வருமான வரிக்கு பலே வரவேற்பு.. 66% பேர் மாறுவார்கள்.. சொல்வது யார் தெரியுமா..?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பார்ட்டி மோடில் யுவனுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட சரத்குமார்: பட்டையக் கிளப்பும் சிப்பரா ரிப்பரா சாங்
சென்னை: Musical Drug என ரசிகர்களால் கொண்டாப்படும் யுவன் சங்கர் ராஜா, திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
சரத்குமார் ஹீரோவாக நடித்த 'அரவிந்தன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள அவர்கள் இருவரும், வேறலெவலில் மாஸ் காட்டியுள்ளனர்.
கோச்சடையான்
படத்திற்காக
கடன்
பெற்ற
விவகாரம்:
லதா
ரஜினிகாந்த்
மீதான
வழக்கில்
3
பிரிவுகள்
ரத்து

தமிழ் சினிமாவில் யுவனிஸம்
இளம் தலைமுறை இசை ரசிகர்களின் மிகப் பெரிய ஸ்ட்ரஸ் பஸ்டர் யுவன் சங்கர் ராஜா தான். அவரது பாடல்களுக்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. யுவனின் இசையாகட்டும் அல்லது அவரது குரலாகட்டும், துக்கத்தில் இருந்து தங்களை மீட்டெடுக்கும் தரமான போதை என, ரசிகர்கள் கொண்டாடுவது உண்டு.

25 ஆண்டுகளை கடந்த யுவன்
1997ல் சரத்குமார் ஹீரோவாக நடித்த ‘அரவிந்தன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன். 25 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன், இப்போ படங்கள் தயாரிப்பதிலும் களமிறங்கியுள்ளார். தமிழ்த் திரையுலகில் யுவனின் இசைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

யுவனை கடத்திய சரத்குமார்
யுவன் தற்போது ‘காஃபி வித் காதல்', ‘பரம்பொருள்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரது இசையில் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்' படம், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவனை, நடிகர் சரத்குமார் கடத்திச் சென்ற வீடியோ செம்ம வைரலானது. அமித்தாஷ், சரத்குமார் இணைந்து நடிக்கும் ‘பரம்பொருள்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்காக தான், இந்த கடத்தல் நாடகமெல்லாம் அரங்கேறியது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிப்பர ரிப்பரா
'பரம்பொருள்' படத்திற்காக ‘சிப்பர ரிப்பரா' என்ற பாடலை யுவன் கம்போஸ் செய்து வருவதாகவும், அந்த வீடியோவில் இருந்தது. அதனை பார்த்த ரசிகர்களிடம் ‘சிப்பர ரிப்பரா' பாடல் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பையும் மீறி இப்போது ‘சிப்பர ரிப்பாரா' பாடல் பட்டையைக் கிளப்பி வருகிறது. விவேக் வரிகளில் யுவன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, ராக்ஸ்டார் அனிருத் அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video

யுவனுடன் ஆட்டம் போட்ட சரத்குமார்
நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவில் பிஸியாக இருக்கும் சரத்குமார், ‘பரம்பொருள்' படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், பார்ட்டி மோடில், வாழ்க்கையின் தத்துவங்களை பேசுவதாக உருவாகியுள்ள ‘சிப்பர ரிப்பரா' பாடலில், சரத்குமார் செம்ம ஆட்டம் போட்டுள்ளார். அவருக்கு சங்கர் மகாதேவனின் வாய்ஸ் செம்மையாக செட் ஆகியுள்ளது. மேலும், பாடலின் இறுதியில் யுவனும் என்ட்ரி கொடுக்க, அவருடன் சரத்குமார் ஆட்டம் போடுவது, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.