»   »  தாயின் பிறந்த நாளன்று மகளுக்குத் தந்தையான யுவன் சங்கர் ராஜா!

தாயின் பிறந்த நாளன்று மகளுக்குத் தந்தையான யுவன் சங்கர் ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாயின் பிறந்த நாளன்று மகளுக்குத் தந்தையாகும் கொடுப்பினை எத்தனைப் பேருக்கு வாய்க்கும்? அப்படி ஒரு கொடுப்பினை வாய்த்திருக்கிறது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு!

நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 7) இசைஞானி இளையராஜாவின் மனைவியும் யுவன் சங்கர் ராஜாவின் தாயாருமான மறைந்த ஜீவாவின் பிறந்த நாள். இந்த நாளில் யுவன் சங்கர் ராஜா - ஜபருன்னிசா தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

Yuvan blessed with baby girl

தன் அம்மா மீது மிகவும் பாசத்தோடு இருந்த யுவனுக்கு, அம்மாவின் பிறந்த நாளன்றே மகள் பிறந்ததில் ஏக மகிழ்ச்சி. இதனை தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார் யுவன். ட்விட்டரிலும் இந்த செய்தியைப் பதிவிட்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவுக்கு அவரது தந்தை இளையராஜா வாழ்த்துத் தெரிவித்தார். யுவனின் சகோதர சகோதரிகள் உறவினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

English summary
Music Director Yuvan Shankar Raja has blessed with a baby girl on Thursday

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil