இன்ஸ்டாவில் யுவன் சங்கர் ராஜா… ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது!
சென்னை : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

இளையராஜாவின் இளைய மகனான யுவன்சங்கர் ராஜா, தனது 16வது வயதிலேயே தனது இசைப்பயணத்தை தொடங்கினார். அரவிந்தன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார். பின்னர் துள்ளுவாதோ இளமை திரைப்படத்தில் இசையமைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் யுவன்.

பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முகத் தன்மைக்கொண்ட யுவன். மேற்கத்திய இசையை பயன்படுத்துவதில் வல்லவராக இருக்கிறார் . தமிழ் நாட்டில் ரீ மிக்ஸில் புது யுக்தியை புகுந்தி அதிலும் வெற்றி கண்டு வருகிறார். 125 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பாப்பில் இருக்கும் மாநாடு மற்றும் வலிமை திரைப்படத்திற்கு தரமான இசை அமைத்துள்ளார். அதில் பின்னணி இசை மற்றும் பிஜிஎம் மிகவும் அற்புதமாக கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் யுவன் சங்கர் ராஜாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது. யுவனை பின்தொடர்பவர்களின் எண்ணிகை குறைவாகதாக இணையத்தில் வெளியான தகவலை தொடர்ந்து, அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 1மில்லியன் ஃபாலோவர்சை எட்டி உள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











