twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித்திடம் அது கிடைத்தது... ஆனால் விஜய்யுடன் அப்படி நடக்கவில்லை: வருத்தத்தில் யுவன்

    |

    சென்னை: திரையுலகில் இசையமைப்பாளராக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

    தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வரும் யுவன் சமீபத்தில் வெளியான லட் டுடே படத்தில் 2கே கிட்ஸ்களுக்கு வெரைட்டியாக ட்ரீட் கொடுத்திருந்தார்.

    இந்நிலையில், தனது திரையுலக வாழ்வில் விஜய், அஜித் இருவருடனும் இருந்த நட்பு குறித்து யுவன் மனம் திறந்து பேசிய ஃபிளாஷ்பேக் வீடியோ வைரலாகி வருகிறது.

     விஜய் சேதுபதிக்கு 4 கதைகள் கூறியிருக்கும் மிஷ்கின்... மேற்கொண்டு இரண்டு கதைகள் தயார் விஜய் சேதுபதிக்கு 4 கதைகள் கூறியிருக்கும் மிஷ்கின்... மேற்கொண்டு இரண்டு கதைகள் தயார்

    திரையுலகில் யுவனிசம்

    திரையுலகில் யுவனிசம்

    'அரவிந்தன்' படத்தில் இளம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா. 1997ம் ஆண்டு தனது 17வது வயதில் தொடங்கிய யுவனின் இசை பயணம் 25 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், அவரது இசையில் இன்னும் அந்த இளமைத் துள்ளல் குறையவே இல்லை. இசைஞானி இளையராஜாவின் வாரிசு என்பதையும் கடந்து தனது தனித்துவமான இசையால் வலம் வரும் யுவன், தற்போது படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், யுவனின் பிளாஷ்பேக் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், அவர் விஜய், அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    தோல்வியில் துவண்ட யுவன்

    தோல்வியில் துவண்ட யுவன்

    ஆரம்ப காலத்தில் யுவன் இசையமைத்ததில் பூவெல்லாம் கேட்டுப்பார் முக்கியமான திரைப்படமாகும். சூர்யா, ஜோதிகா நடித்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. ஆனால், படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிப் பெறவில்லை. அதன்பின்னர், சுமார் மூன்றரை வருடங்கள் வரை எந்த படங்களுக்கும் இசையமைக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கிறார் யுவன். இதனால், கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக யுவன், அதிலிருந்து மீள அஜித் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.

    திருப்பிப் போட்ட தீனா

    திருப்பிப் போட்ட தீனா

    அப்போது யுவனுக்கு அஜித்தின் 'தீனா' படத்திற்கு மியூசிக் கம்போஸ் செய்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதுகுறித்து கூறியுள்ள யுவன், "தீனா படத்தின் போது அஜித் சாரை சந்தித்தேன். அப்போது, யுவன் நீ உன்னோட பெஸ்ட்டை இந்தப் படத்திற்கு தர வேண்டும்" எனக் கூறினார். "அந்த எனெர்ஜியோடு இசையமைத்த படம் தான் தீனா. அதன்பின், நந்தா, துள்ளுவதோ இளமை என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தேன். நானும் அஜித் சாரும் பெரும்பாலும் சினிமா தொடர்பாக தான் பேசுவோம். நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு, பின்னணி இசை சூப்பர் என பாராட்டினார். அதேபோல், அடுத்த படத்தில் மாஸ் பாடல் வேண்டும்" என்றும் அஜித் கேட்டதாகக் கூறியுள்ளார்.

    விஜய் எப்போதுமே அப்படித்தான்

    விஜய் எப்போதுமே அப்படித்தான்

    அதேபோல் யுவன் - விஜய் கூட்டணியில் புதிய கீதை படம் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய் பற்றி பேசியுள்ள யுவன், "புதிய கீதை படத்தில் வசியக்காரி என்ற பாடலுக்காக ஸ்டூடியோ வந்த விஜய் ரொம்ப அமைதியாகவே இருந்தார். அந்தப் பாட்டை கேட்டு முடித்ததும் ஓகே என சொல்லிவிட்டு போய்விட்டார். தனிப்பட்ட முறையில் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் மாஸ்டர் படத்தில் பாடுவதற்காக அனிருத் ஸ்டூடியோ சென்றிருந்த போது விஜய்யை சந்தித்தேன். ஆனாலும், நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை, இருவரும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கவில்லை." என யுவன் கூறியுள்ளார்.

    English summary
    Yuvan Shankar Raja has completed 25 years as a music composer in the film industry. He has opened up about his friendship with Vijay and Ajith in his film career.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X