»   »  யுவன் ஷங்கர் ராஜாவின் காஸ்ட்லி கார் திருட்டு

யுவன் ஷங்கர் ராஜாவின் காஸ்ட்லி கார் திருட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil
யுவன் ஷங்கர் ராஜாவின் காஸ்ட்லி கார் திருட்டு..

சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் விலை உயர்ந்த கார் திருடப்பட்டுள்ளது.

இசைஞானியின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா கோலிவுட்டின் பிசியான இசையமைப்பாளர்களில் ஒருவர். அவர் இசையமைத்த 125வது படமான இரும்புத்திரை ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

Yuvan Shankar Rajas costly car stolen

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். அவர் தற்போது கொலையுதிர்காலம் உள்பட 3 படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் யுவன் வைத்திருந்த விலை உயர்ந்த கார் திருடு போயுள்ளதாக சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் நவாஸ் கான் தான் அந்த காரை திருடிச் சென்றதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நவாஸ் கானை தேடி வருகிறார்கள்.

English summary
A complaint has been given in Egmore police station on behalf of music director Yuvan Shankar Raja after his driver stole his costly car.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X