twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    க/பெ ரணசிங்கம் படத்தை பார்க்க பேஜ் பெர் வியூ தேவையில்லை.. ஜீ5 அதிரடி முடிவு!

    |

    சென்னை : விஜய் சேதுபதியின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவான க/பெ ரணசிங்கம் திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

    விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் லீட் ரோலில் அரியநாச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்க ஜீ5-ன் ஜீ ப்ளக்ஸ் பேஜ் பெர் வியூவ் என்ற கணக்கில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்பொழுது அது தேவையில்லை என ஜீ 5 நிறுவனம் அதிரடியாக கூறியுள்ளது.

    படங்கள் வெளியாகாமல்

    படங்கள் வெளியாகாமல்

    கொரானா தொற்று பரவலின் அசாதாரண சூழ்நிலை காரணமாக திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டு திரைப் படங்கள் வெளியாகாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளன.

    க/பெ ரணசிங்கம்

    க/பெ ரணசிங்கம்

    இதில் பெரும் பொருட்செலவில் உருவான பல திரைப்படங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி சக்கை போடு போட்டது.

    ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில்

    ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில்

    படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என பார்த்து பார்த்து திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து நடித்திருக்க இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்.

    199 ரூபாய்

    199 ரூபாய்

    க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் டிரைலர் வெளியான நாள் முதல் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடி இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஜீ5 குடும்பத்தின் மற்றொரு ஓடிடி தளமான ஜீ பிளக்ஸ் தளத்தில் பேஜ் பெர் வியூ என்ற கணக்கில் 199 ரூபாய் ஒவ்வொரு பார்வையாளர்களிடமிருந்தும் வசூலிக்கப்படும் என நிறுவனம் கூறியிருந்தது.

    நான்கு மொழிகளிலும்

    நான்கு மொழிகளிலும்

    அதன்படி வெளியிடப்பட்ட க/பெ ரணசிங்கம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

    பேஜ் பெர் வியூ வசூலிக்கப்படாது

    பேஜ் பெர் வியூ வசூலிக்கப்படாது

    இவ்வாறு அனைத்து மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட க/பெ ரணசிங்கம் திரைப்படம் இனி ஜீ5ல் மெம்பராக இருக்கும் அனைவரும் பார்த்துக் கொள்ளலாம் எனவும், பேஜ் பெர் வியூ என்ற கணக்கில் 199 ரூபாய் வரும் நவம்பர் 6ஆம் தேதி முதல் வசூலிக்கப்படாது எனவும் ஜீ 5 நிறுவனம் அதிரடியாக அறிவித்திருந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    English summary
    zee5 say no more pay per view for Ka Pae Ranasingam
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X