ஓடிடி.,யில் மிரட்ட வரும் சிரஞ்சீவி – ராம்சரணின் ஆச்சார்யா... எப்போ, எதில் ரிலீஸ் தெரியுமா ?

சென்னை : சிரஞ்சீவி, ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படம், எந்த தேதியில் எந்த ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி, ராம்சரண், பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால்,சோனு சூட், கிஷோர் குமார், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஆச்சார்யா. இந்த படத்தை கொரட்டல சிவா எழுதி இயக்கி இருந்தார். இந்த படம் ஏப்ரல் 29 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இத்தனை கோடி பட்ஜெட்டா

இத்தனை கோடி பட்ஜெட்டா

140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆச்சார்யா படம், கொரோனாவால் தாமதமாகி ஒரு வழியாக ரிலீஸ் செய்யப்பட்டது. தெலுங்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றது. பல காரணங்களால் காஜல் அகர்வால் நடித்த காட்சிகளும் நீக்கப்பட்டு, பிறகு ரிலீஸ் செய்யப்பட்டதும் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்து, படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

ஆச்சார்யா வசூல் எவ்வளவு

ஆச்சார்யா வசூல் எவ்வளவு

சிரஞ்சீவி, நடுத்தர வயது நக்சலைட் ரோலில் நடித்துள்ளார். நக்சலைட்டாக இருந்து பிறகு சமூக சேவகராக மாறுவது தான் ஆச்சார்யா படத்தின் கதை. இந்த படம் இது வரை 75 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபீசில் மிகவும் மோசமான வசூலையே பெற்றுள்ளது. மோசமான திரைக்கதை தான் இந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

தோல்விக்கு இதுதான் காரணமா

தோல்விக்கு இதுதான் காரணமா

ரசிகர்களை கவர இந்த படம் தவறி விட்டதாக பெரும்பாலான விமர்சனங்கள் கூறுகின்றன. ஆச்சார்யா படத்தை ப்ரோமோட் செய்யவும் படக்குழு தவறி விட்டது. இதுவும் ரசிகர்களிடம் அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்தது. மணி சர்மா இசையில் உருவாக்கப்பட்ட பாடல்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் படக்குழு பெரிய அளவில் அப்செட்டில் இருக்கிறதாம்.

ஓடிடி ரிலீஸ் எப்போ

ஓடிடி ரிலீஸ் எப்போ

இந்நிலையில் தியேட்டரில் ரிலீசான வெறும் 21 நாட்களில் ஆச்சார்யா படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மே 20 ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் இந்த படம் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் டிவியிலும் ஆச்சார்யா படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X