விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ்.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை: அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'லவ் மேரேஜ்'. இதில் கதாநாயகியாக சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக்,கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜீன் மாதம் தியேட்டரில் வெளியான இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையை சேர்ந்த ராம் என்கிற விக்ரம் பிரபுக்கு முப்பது வயதைத் தாண்டியும் திருமணம் நடக்கவில்லை. ஒரு காலத்தில் அவர் பல பெண்களை பார்க்க சென்று வேண்டாம் வேண்டாம் என நிராகரித்த நிலையில் இப்போது, அவருக்கு முப்பது வயதாகி விட்டதால், அவரை பல பெண்கள் நிராகரிக்கின்றனர். விக்ரம் பிரபுவின் ராசிக்கு பெண்ணே கிடைக்காது என அனைவரும் சொல்லிசொல்லி ஒரு கட்டத்தில் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்ற வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிடுகிறார்.

Vikram Prabhu Love Marriage OTT
Photo Credit:

லவ் மேரேஜ்: அந்த நேரத்தில் தான் த வேறு ஊரில், வேறு சாதியில் சுஷ்மிதா பட் பெண்ணை, தரகர் மூலம் பார்க்கிறார்கள். பெண் பார்ப்பதற்காக இவர்கள் கோபிசெட்டிப்பாளையம் செல்கின்றனர். இந்த நேரத்தில் கரோனா பரவல் காரணமா திடீரென பொது முடக்கம் அறிவிக்கப்படுகிறது. இதனால், வேறுவழியே இல்லாமல், பெண் வீட்டிலேயே அவர்கள் சில வாரங்கள் தங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் விக்ரம் பிரபுவின் உறவினர்களால் அங்கு பல பிரச்சனை செய்கின்றனர். இதனால் விக்ரம் பிரபுவின திருமணத்தில் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கல் தீர்ந்து திருமணம் நடந்ததா? திருமணம் பேச்சுவார்த்தையோடு நின்றதா என்பது தான் 'லவ் மேரேஜ்' திரைப்படத்தின் கதை. திரையரங்குகளில் வரவேற்பை பெற்ற இப்படம் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

காதி: இந்த படத்திற்கு முன்பாக விக்ரம் பிரபு நடித்த இறுகப்பற்று திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் நல்ல கதைக்களம் கொண்ட இந்தபடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது விக்ரம் பிரபு, க்ரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகி உள்ள 'காதி' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜெகபதி பாபு, ஜான் விஜய், தேவிகா பிரியதர்ஷினி, VTV கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இது விக்ரம் பிரபு நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும், இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X