Don't Miss!
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்.. புஜாராவின் தரமான இன்னிங்ஸ்.. வலுவான நிலையில் இந்தியா
- News
நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அமேசான் பிரைம் ஆந்தாலஜி...கொரோனா காலத்தின் அழகிய நட்பை உணர்த்தும் ’லோனர்ஸ்’
அமேசான் பிரைமின் 'புத்தம் புதுக் காலை' தொகுப்பின் இரண்டாவது பதிப்பு, கொரோனா தொற்று ஊரடங்கில் மனித உணர்வுகளின் பாதிப்பை தெளிவாக விளக்கும் படங்களை அளிக்கிறது. 5 படங்களில் முதலிடத்தில் மௌனமே பார்வையாய் படத்தை அடுத்து இடம்பெறுவது 'லோனர்ஸ்' படம் பற்றி பார்ப்போம்.
பொங்கலுக்கு
ரவிச்சந்திரன்
பேத்தியோட
க்யூட்
வாழ்த்த
பாருங்க!

கொரோனா தனிமை கொடுமை
கொரோனா காலகட்டத்தின் முதல் அலை நீண்டகால தனிமைப்படுத்துதல், ஊரடங்கை கொண்டது. இதில் பரபரப்பாக இயங்கியவர்கள், அன்றாடம் உழைத்தால் தான் வருமானம் என்று வாழ்ந்தவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பதை யாரும் பதிவு செய்யவில்லை. தனிமைப்படுத்துதல் காலக்கட்டத்தை அவரவர் அவரவரின் பார்வையில் மட்டுமே அணுகியுள்ளனர்.

நகர் வாழ்க்கையை மட்டுமே பிரதிபலிக்கும் ஆந்தாலஜி படங்கள்
பெரும்பாலான கோடிக்கணக்கான மக்கள் ஊரடங்கினால் கொடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு இடங்களிலும் ஓராயிரம் கதைகள் இருக்கும். ஆந்தாலஜி சில கதைகளை சொல்கிறது. அவையனைத்தும் நகர வாழ்க்கையில் வருமானம் உள்ள மிடில் கிளாஸ் அல்லது மேல்தட்டு மத்திய தர வர்க்கத்தின் வாழ்க்கை சூழலை மட்டுமே பிரதிபலிக்கின்றன. அதையாவது செய்கிறார்களே என திருப்திபட்டுக்கொண்டு பார்த்தால் நல்ல படமாக உள்ள ஒரு படம்தான் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ஆந்தாலஜி படத்தில் உள்ள 'லோனர்ஸ்' படம்.

அன்பைத்தேடி
சென்னையின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு இளைஞனுக்கும், சென்னையை நம்பி வந்து கொரோனா ஊரடங்கினால் பணி பாதிக்கப்பட்டு, சேமிப்பு சில காலமே உள்ள நிலையில், காதலனால் கைவிடப்பட்டு தனிமையில் வாழும் இளம்பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் நல்ல நட்பை அழகாக சொல்லியிருக்கும் படம் தான் புத்தம் புது காலை விடியாதா தொகுப்பில் வெளியாகியுள்ள 'லோனர்ஸ்'.

மறக்க நினைக்கும் ஊரடங்கு நாட்கள்
கொரோனா பேரிடர் காலத்தின்போது நீண்ட மாதங்களுக்கு போடப்பட்ட ஊரடங்கை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. நோய் குறித்த அறியாமையால் வந்த பயம், உயிர் பிழைப்போமா இல்லையா என்கிற நிலை, நெருக்கமானவர்களின் மரணங்கள் ஏற்படுத்திய வலிகள், ஊரடங்கினால் வருமானம் பாதிக்கப்பட்டு திடீர் பொருளாதார முடக்கத்தில் வாடிய வாழ்க்கை என கெட்ட கனவுகளாய் பல சம்பங்களை மறக்க நினைத்தாலும் முடியாத நிலை பலருக்கு அனுபவமாக இருக்கும். லோனர்ஸ் அதை நமக்கு உணர்த்துகிறது.

அட நம்ம ஜெய்பீம் நாயகி அழகாக அசத்தியுள்ளார்
அப்படி பல சம்பவங்களை இயக்குநர்கள் அவரவர் பாணியில் தொகுப்பாக கொடுத்துள்ள அமேசானில் வெளியாகியுள்ள புத்தம் புது காலை விடியாதா ஆந்தாலஜியில் அழகான ஒரு படம் தான் லோனர்ஸ். இயக்குநர் ஹலிதா ஷமீம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். நல்லதங்காளாக வரும் லிஜாமோல் ஜோஸ் ( அட ஜெய் பீம் கதாநாயாகியா இவர்) வீட்டில் அடைப்பட்டு கிடக்கும்போது உணவு டெலிவரி பாய் உணவை கொண்டு வந்து கொடுப்பதும், தொடர்ந்து தனது முன்னாள் காதலனிடமிருந்து போன் வருவதும் ஜிபிஎஸ் தவறாக உன் முகவரியை காட்டிவிட்டது உணவை வாங்கிக்கொள் என கூறும் காட்சியில் காதலின் இழப்பும், தனிமையும் வாட்டும் நிலையை அழகாக பிரதிபலிக்கிறார் லிஜாமோல்.

கொரோனா தந்த வலியை அழுத்தமாக உணர்த்தும் படம்
கொரோனா ஊரடங்கில் தனிமையில் இருப்பவர்கள் சமூகம் நடத்தும் ஜூம் மீட்டிங்கில் தனது உயிர் நண்பன் கடைசியாக செல்ல நாயை ஒப்படைத்துவிட்டு மருத்துவமனை சென்றவர் கொரோனாவால் உயிரிழந்ததி விவரிக்கும் கட்டைக்குரலோன் அர்ஜுன்தாஸ் மீது பரிதாபப்பட்டு அவரை தொடர்புக்கொள்கிறார் லீஜாமோல். அதன் பின் மலரும் அழகான நட்புதான் படத்தின் மீதி கதை. படத்தில் வசனத்தில் அழுத்தமாக சில உணர்வுகளை நம்மிடையே விதைக்கிறார்கள். கொரோனா ஊரடங்கினால் மனதளவில் அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் படம் பார்க்கும் நம்மை படம் ஆட்கொள்வதை உணர்கிறோம்.
நட்பு எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் மலரலாம்
கட்டைக்குரலோன் அர்ஜுன் தாஸ், லீஜா மோல் அழகாக நடித்துள்ளார்கள், ஆனால் வசனம் பல இடங்களில் புரியவில்லை. பல இடங்களில் ஆங்கிலத்திலேயே வசனங்கள் பேசுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வர்க்கத்துக்காக படம் எடுக்கும் நிலை மாறினால் அனைத்து தரப்பு மக்களையும் இதுபோன்ற படங்கள் சென்றடையும். நட்பு எங்கு வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் மலரும் என்பதே கதையின் மெல்லியக்கரு. அதை படத்தில் பதிவு செய்து குறைவில்லாமல் நகர்த்துவது பிளஸ்பாயிண்ட். கொரோனா காலக்கொடுமையை அரைமணி நேரத்தில் பதிய வைப்பதில் இயக்குநர் வெற்றிப்பெற்றுள்ளார்.