அனுஷ்கா ரசிகர்களுக்கு மஜா செய்தி.. காட்டி திரைப்படம் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?
ஹைதராபாத்: நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் நடிகைகளில் ஒருவராக ஜொலித்துக்கொண்டிருந்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் சுத்தமாக வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தவர் சில வருடங்களுக்கு முன்பு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். கடைசியாக அவரது நடப்பில் காட்டி திரைப்படம் வெளியானது.
யோகா டீச்சராக இருந்து பிறகு நடிகையாக அறிமுகமானவர் அனுஷ்கா ஷெட்டி. நாகார்ஜுனாவுக்கி ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமான அவர் தொடர்ந்து தெலுங்கில் கிளாமர் ரோல்கள் செய்து ரசிகர்களின் கவனத்தை பெரிதளவு ஈர்த்தார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் அருந்ததி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ளதாக அமைந்து அனுஷ்காவுக்கு மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. இதனால் அவருக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பிஸி: ஒரு பக்கம் தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தவர் கோலிவுட்டிலும் தனது கவனத்தை திருப்பினார். அதன்படி இங்கும் அவருக்கு வாய்ப்புகள் கொட்டிக்கிடைக்க; விஜய், விக்ரம், ரஜினி, சூர்யா, அஜித், சிம்பு, ஆர்யா என பலருடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழில் கிளாமர் ரோல்கள் மட்டுமின்றி நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ரோல்களிலும் நடித்து அசத்திக்கொண்டிருந்தார். அனுஷ்கா இதனால் தமிழிலும் டாப் மூன்று இடங்களுக்குள் இடம் பிடித்தார்.

பாகுபலிதான் மாஸ்: இந்த நிலைமையில்தான் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் அனுஷ்காவின் மார்க்கெட்டை பான் இந்தியா அளவில் உயர்த்தியது. இதனால் அவரது சம்பளமும் பன்மடங்கு உயர்ந்து அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் ஆக நிச்சயம் வந்துவிடுவார் என்று பலராலும் கணிக்கப்பட்டிருந்தார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடித்தபோது உடல் எடையையும் கூட்டியவர்; மீண்டும் அந்த எடையை குறைக்க முடியாமல் தடுமாறினார். இதனால் அவருக்கு வாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தன.
ரீ என்ட்ரி: ஒரு வழியாக தெலுங்கில் அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர தொடங்கியிருக்கின்றன. அதன்படி முதலில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து நன்றாகவே நடித்திருந்தார். படமும் ஃபீல்குட் படமாக அமைந்தது. அடுத்ததாக வேதம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்கத்தில் சமீபத்தில் காட்டி என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் அவருடன் விக்ரம் பிரபு, ஜெகபதிபாபு நடித்திருந்தார்கள்.
ஓடிடியில் ரிலீஸ்: படத்துக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தடு. இந்நிலையில் அந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படமானது 26ஆம் தேதி அதாவது நாளை முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. தியேட்டர்களில் கிடைத்த ரெஸ்பான்ஸ் படிப்படியாக குறைந்ததன் காரணமாக இவ்வளவு சீக்கிரமாக படத்தை ஓடிடியில் கொண்டுவர படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











