ஓடிடி.,க்கு வரும் பீஸ்ட்... எப்போ, எந்த தளத்தில் வருகிறது தெரியுமா ?

சென்னை : விஜய் நடித்த பீஸ்ட் படம் தியேட்டரில் ரிலீசான ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இது ஒரு புறம் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், மற்றொரு புறம் வருத்தத்தை தந்துள்ளது.

டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட்

2022 ம் ஆண்டில் ரசிகர்களால் மட்டுமின்றி தியேட்டர் தொழிலாளர்களாலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று விஜய்யின் பீஸ்ட். படத்தின் ஃபர்ஸ்லுக் மற்றும் டைட்டில் கடந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அப்போது துவங்கி தொடர்ந்து பீஸ்ட் பற்றி எந்த தகவல் வெளி வந்தாலும் அது செமயாக டிரெண்டிங் ஆகின.

சாதனை படைத்த அரபிக்குத்து

சாதனை படைத்த அரபிக்குத்து

இந்த ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து பாடல். இது வேற லெவலில் ஹிட் அடித்தது. யூட்யூப்பில் மட்டும் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் பாடலே இத்தனை ஹிட் என்றால் படம் எப்படி இருக்கும் என அனைவரின் மனதிலும் எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்தது. அதற்கு பிறகு வெளியிடப்பட்ட திரை தீப்பிடிக்கும், ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்களும் ஹிட் ஆகின.

பீஸ்ட் வசூல் எவ்வளவு தெரியுமா

பீஸ்ட் வசூல் எவ்வளவு தெரியுமா

ஆனால் படத்தின் டிரைலர் வெளியானது முதலே நெகடிவ் கமெண்ட்கள் வர துவங்கின. இது கூர்கா, மணி ஹெய்ஸ்டிங் படங்களின் காப்பி என்று கூட சொல்லப்பட்டது. படம் ரிலீசான பிறகும் கலவையான விமர்சனங்களை பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய பீஸ்ட் தவறி விட்டதாகவும், நெல்சன் திரைக்கதையை சொதப்பி விட்டதாகவும் பல வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. படம் ரிலீசாகி ஒரு மாதம் ஆகி போகிறது. ஆனால் பீஸ்ட் தற்போது வரை உலகம் முழுவதும் 250 கோடிகளை கூட எட்டவில்லை.

பீஸ்ட் ஓடிடி ரிலீஸ்

பீஸ்ட் ஓடிடி ரிலீஸ்

இந்நிலையில் பீஸ்ட் படம் விரைவில் ஓடிடி.,யில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படங்கள் தியேட்டரில் ரிலீசான 3 வாரங்களில் ஓடிடியில் வெளியிடப்படலாம் என்றாலும் தியேட்டர்களில் வசூலில் திணறி வரும் நிலையில், ஓடிடியில் பீஸ்ட் படம் வெளியிடப்பட்டால் அது வசூலை மேலும் பாதிக்கும் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

எப்போ, எதில் வருகிறது

எப்போ, எதில் வருகிறது

தியேட்டரில் ரிலீசாகி 28 நாட்களில் பீஸ்ட் படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மே 11 ம் தேதி சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் தளங்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 11 அன்று நள்ளிரவு 12 மணிக்கு பீஸ்ட் படம் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

ஓ...ஓடிடியில் வேறயா

ஓ...ஓடிடியில் வேறயா

இதனையும் சிலர் கலாய்த்து மீம்கள் பதிவிட்டு வருகிறார்கள். தியேட்டருலயே பார்க்க முடியல இதுல ஓடிடியில் வேறயா. பீஸ்ட் 2 எப்போ எடுப்பீங்க. மெகா மொக்க படம்ப்பா. இந்த இரண்டு தளத்தில் தான் வருதா. அப்போ இரண்டையும் Uninstall பண்ண நேரம் வந்திடுச்சு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X