Bigg Boss: கனி திருவைக் கூப்பிட்டு லெஃப்ட் & ரைட் விட்ட பிக் பாஸ்.. இனியாவது புள்ள பொழச்சுக்குமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 பரபரப்பாக போய்க்கொண்டு உள்ளது. இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதமாக இருப்பதால் ரசிகர்களுக்கே போட்டியாளர்களை மதிப்பிட மிகவும் சவாலாக தான் உள்ளது. இப்படி இருக்கும்போது, இந்த சீசனில் களமிறங்கிய கனி திரு ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தையும், தனக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் பெற்றுள்ளவர். இப்படி இருக்கும்போது, இந்த சீசன் இதற்கு முந்தைய சீசன்களை விட வித்தியாசப்பட்டு உள்ளது. இந்நிலையில் கனி திருவை அழைத்து லெஃப்ட் & ரைட் விட்டுள்ளார் பிக் பாஸ்.

அதாவது கனி திருவின் மற்றொரு பெயர் காரக்குழம்பு கனி என்பதுதான். காரணம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எந்த ரவுண்ட் போட்டி என்றாலும் காரக்குழம்பு வைத்து அசத்திவிடுவார். இதனாலேயே இவருக்கு இந்த பெயர் வந்தது. இப்படி இருக்கையில் இந்த சீசனில் உள்ளே வந்ததில் இருந்து, ஏதோ இந்த சீசன் போட்டியாளர்களுக்கு சமைத்து கொடுக்கும் சமையல் கான்ட்ராக்ட் எடுத்துக் கொண்டு வந்தது போல, வந்த முதல் நாளைத் தவிர இரண்டாவது நாளில் இருந்து சமையலில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

Bigg Boss Tamil 9 Bigg Boss Slams Kani Thiru And Her Involvement In Game
Photo Credit:

சமையலே கதி: ஆனால் மற்ற போட்டியாளர்களோ, எதோ 50 நாட்களை கடந்து ஆட்டம் போய்க்கொண்டு உள்ளது போல என்ற மனநிலையில் விளையாடி வருகிறார்கள். பார்வதியும் கெமியும் போட்ட குழாயடிச் சண்டையை பார்க்கும் போது, இருவருக்கும் ஏதாவது ரத்தக் காயங்கள் ஆகிவிடுமோ என்ற எண்ணமும் கூட ஏற்பட்டது. அதே நேரத்தில் வீட்டில் உள்ள சக பெண் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், கனி திரு தான் அதிக வயது உடையவர். ஆனால் வீட்டில் சக போட்டியாளர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னைகளின் போதோ, வீட்டுக்கான பிரச்னையின் போதோ, எதுவும் கருத்து சொல்லாமல், பிரச்னை என்றால் நான் மௌன விரதம் என்று கோவிலில் சத்தியம் செய்து கொடுத்ததைப் போல மிகவும் அமைதியாகவே இருக்கிறார்.

கப் சிப் பாலிசி: பிக் பாஸ் தரப்பில் எடிட் செய்து போடும் எபிசோடில் தான் கனி பேசுவது வரவில்லை என்று 24 மணி நேர லைவில் பார்த்தாலும் கனி கப்சிப் பாலிசியைத்தான் பின் பற்றி வருகிறார். இப்படியே போனால் சோலி சுத்தம் என்று பிக் பாஸ் நினைத்தாரோ என்னவோ, கனி திருவை கூப்பிட்டு லெஃப்ட் & ரைட் விட்டுள்ளார்.

பிக் பாஸ் அட்வைஸ்: அதாவது, " உங்களை இங்க நிறைய இடங்களில் பார்க்கவே முடியலயே என்ன ஆச்சு என்று பிக் பாஸ் கேட்க, அதற்கு கனி சமையலில் மூழ்கிவிட்டேன் என்று பதில் அளித்தார். உடனே பிக்பாஸ், நீங்க நல்லா சமைப்பீங்கனு எல்லாருக்கும் தெரியும். அதுக்கு பாராட்டுகளும் கிடைச்சுது. இந்த நிகழ்ச்சி நீங்க யாரு, எப்படிப்பட்டவர் என்பதைக் கடந்து, உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டத்தான். சமையலை கடந்து நிறைய இருக்கு. அந்த திறமைகளை வெளியே காட்டுங்க" என்று சொல்லி அனுப்பிவிட்டார். பிக் பாஸின் இந்த செயலைப் பார்த்த பலரும் பிக்பாஸை பாராட்டி வருகிறார்கள். மேலும் கனியின் தங்கை விஜி எப்படி எல்லாம் நன்றாக ஆடினார் ஆனால் கனி என்னடா என்றால் சமையலே கதி என்று இருக்கிறார் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X