OTT Release movies: தியேட்டரில் வசூல் வேட்டை நடத்திய.. கூலி, சையாரா.. ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
சென்னை: இந்த வாரம் தியேட்டரில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி, கேபிஒய் பாலா நடித்த காந்தி கண்ணாடி, வெற்றி மாறன் தயாரித்த பேட் கேர்ள், அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பாபு நடித்த காட்டி போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இதில், மதராஸி திரைப்படம் நல்ல வசூலை அள்ளி வருகிறது. இந்த வாரம் தியேட்டரில் எந்த பெரிய படமும் வெளியாகாததால், சினிமா பிரியர்களின் பார்வை ஓடிடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
கூலி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பான் இந்தியா படம் கூலி. ஆகஸ்ட் 14ந் தேதி இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜூன், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் நன்றாக கல்லா கட்டியது. இத்திரைப்படம், செப்டம்பர் 11ந் தேதி Prime Videoவில் ஸ்ட்ரீம் ஆகும். ஆனால்,தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் மட்டுமே கூலி படத்தை பார்க்க முடியும். ஹிந்தி வெளியிட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
தி கேர்ள் ஃப்ரெண்ட்: மிஷேல் பிரான்சிஸின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட தி கேர்ள்ஃப்ரெண்ட் ஆறு எபிசோடுகள் கொண்ட உளவியல், த்ரில்லர் கதையாகும். இதில் வலீத் ஜுவைட்டர், அன்னா சான்சலர், ஷாலோம் புரூன்-ஃபிராங்க்ளின் மற்றும் லியோ சுட்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தி கேர்ள் ஃப்ரெண்ட் செப்டம்பர் 10ந் தேதி முதல் முதல் Prime Videoவில் பார்க்கலாம்.

பியூட்டி இன் பிளாக் சீசன் 2: பியூட்டி இன் பிளாக் இரண்டாவது சீசன் அறிவிப்புக்கு பின் ஒரு வருடம் கழித்து நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 11ந் தேதி வெளியாக உள்ளது. குடும்பத் தலைவர் ஹோரேஸை மணந்த பிறகு, பெல்லாரி அழகு சாம்ராஜ்யத்தின் தலைவராக கிம்மி தனது பாத்திரத்தில் முழுமையாக அடியெடுத்து வைப்பத்தில் இருந்து கதை தொடர்கிறது.
Do You Wanna Partner : தமன்னா பாட்டியா மற்றும் டயானா பென்டி நடித்த இந்த தொடர் Prime Videoவில் செப்டம்பர் 12ந் தேதி வெளியாகி உள்ளது. இந்தத் தொடரில் ஜாவேத் ஜாஃபேரி, நகுல் மேத்தா, ஸ்வேதா திவாரி, நீரஜ் கபி, சூஃபி மோதிவாலா மற்றும் ரன்விஜய் சிங்கா ஆகியோர் நடித்துள்ளனர். தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த தொடரில், உயிர் தோழிகளான தமன்னா பாட்டியா மற்றும் டயானா பென்டி ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகின் முரண்பாடுகளுக்கு எதிராக களமிறங்குகின்றனர்.
சையாரா: இயக்குநர் மோகித் சூரி இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ஒரு காதல் திரைப்படம் சயாரா. 2004 ஆம் ஆண்டு வெளியான 'எ மொமென்ட் டு ரிமெம்பர்' என்ற காதல் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த படத்தை இயக்குனர் மோஹித் சூரி இயக்கி உள்ளார். இந்த ஆண்டின் மிகவும் பேசப்பட்ட காதல் கதை திரைப்படமான இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. ஆகாஷ் பாண்டே மற்றும் அநீத் பட்டா நடித்த இந்த படம் செப்டம்பர் 12 முதல் Netflix-இல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications











