தனுஷின் மாறன் பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாகிறதா?

சென்னை: நடிகர் தனுஷ் இப்பொழுது கார்த்திக் நரேன் கூட்டணியில் மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார்

திரில்லர் கலந்த ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்
அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து மாறன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்க வரும் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

கார்த்திக் நரேன் உடன் கூட்டணி

கார்த்திக் நரேன் உடன் கூட்டணி

நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் மற்றும் கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்து வருகிறது. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள தனுஷ் இப்போது முதல் முறையாக இயக்குனர் கார்த்திக் நரேன் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

ரசிகர்களை பிரமிக்க வைத்து

ரசிகர்களை பிரமிக்க வைத்து

முதல் படம் துருவங்கள் பதினாறு மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன் தனது ஒவ்வொரு படைப்புகளிலும் ரசிகர்களை பிரமிக்க வைத்து வருகிறார். குறிப்பாக த்ரில்லர் கதைகளில் கைதேர்ந்தவரான கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் மற்றும் மாஃபியா உள்ளிட்ட படங்கள் உருவாகின. இதில் மாஃபியா மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நரகாசூரன் நீண்ட காலமாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தனுஷ் பத்திரிக்கையாளராக

தனுஷ் பத்திரிக்கையாளராக

இந்த நிலையில் கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பரபரப்பாக நடைபெற்ற இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. மேலும் இந்த படத்தில் சமுத்திரகனி,ஸ்ம்ருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் அமீர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Recommended Video

Galatta Kalyanam Movie Review | Atrangi Re Review in Tamil by Poster Pakiri | Dhanush |Akshay Kumar
பொங்கலுக்கு ஓடிடியில் ரிலீஸ்

பொங்கலுக்கு ஓடிடியில் ரிலீஸ்

பத்திரிக்கையாளராக இருக்கும் தனுஷுக்கும் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரகனிக்கும் இடையே நடக்கும் மோதலை இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு மாறன் வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் இந்த திரைப்படம் தற்போது பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடித்தளத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X