இரவின் நிழல் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் இல்லையா? ஓடிடி ரிலீஸில் என்ன பிரச்சனை?
சென்னை: அமேசானில் 'இரவின் நிழல்' எனக்கேத் தெரியாமல் என படத்தை இயக்கி நடித்த பார்த்திபனே ட்வீட் போட்டுள்ள நிலையில், அமேசான் பிரைம் ஓடிடியில் படத்தை பற்றிய இன்னொரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த ஜூலை 15ம் தேதி தியேட்டர் ரிலீஸாக வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் எப்போ ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக கேட்டு வந்த நிலையில், பார்த்திபனும் இப்போ வரும் அப்போ வரும் என சரியான தேதியை சொல்ல முடியாமல் தவித்து வந்தார்.
இந்நிலையில், திடீரென அவருக்கே தெரியாமல் இரவின் நிழல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது எப்படி என்றும்? மேலும் சில சர்ச்சைகள் கிளம்பியது ஏன் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

ஓடிடியில் இரவின் நிழல்
பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என பார்த்திபன் இந்த படத்தை விளம்பரம் செய்து வெளியிட்டு இருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் மறுப்பு
ஆனால், ஃபிஷ் அண்ட் கேட் திரைப்படம் தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்றும் பார்த்திபனின் இரவின் நிழல் இல்லை அவர் பொய் சொல்கிறார் என இயக்குநரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து வீடியோக்களையும், ட்வீட்களையும் போட்டு பார்த்திபன் உடன் விவாதம் செய்து வந்தார்.

அமேசானில் இப்படியொரு வார்த்தையா
இந்நிலையில், பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான நிலையில், அதன் Triviaவில் இந்த படம் உலகின் இரண்டாம் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்றும் அதன் இயக்குநர் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் என பொய் சொல்லி வியாபாரம் செய்தார் என்றும் ஒரு வாசகம் இடம்பெற்றிருந்ததாக சில ஸ்க்ரீன் ஷாட்களை ரசிகர்கள் பார்த்திபனின் ட்வீட்டுக்கு கீழே போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

எடிட் செய்யப்பட்டதா
இது உண்மையா? அல்லது எடிட் செய்யப்பட்ட ஒன்றா? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் உடனடியாக அந்த வார்த்தை அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் கூறுகின்றனர். இரவின் நிழல் ஓடிடி ரிலீஸ் தாமதம் ஆனதற்கும், தற்போது அறிவிப்பின்றி வெளியானதற்கும் இடையே ஏதோ பெரிய பிரச்சனை நடந்திருக்கும் என்றும் நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

எனக்கே தெரியாது
"மகிழ்ச்சியை கூட... அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் 'இரவின் நிழல்' எனக்கேத் தெரியாமல்! Please நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot)
ஆதரவை தர வேண்டுகிறேன்! நன்றியுடன் - பார்த்திபன்" என ட்வீட் போட்டுள்ளார். பார்த்திபனுக்கே தெரியாமல், எந்தவொரு முன்னறிவிப்புமின்றி ஓடிடியில் இரவின் நிழல் எப்படி வந்தது. என்ன பிரச்சனை நடந்தது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேக்கிங் வீடியோ இல்லை
தியேட்டரிலேயே, அரை மணி நேரம் இரவின் நிழல் படத்தை எப்படி எடுத்தோம் என்கிற மேக்கிங் வீடியோவுக்கு பின்னர் தான் இரவின் நிழல் படமே ஆரம்பிக்கும். ஆனால், ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த படத்தில் மேக்கிங் வீடியோவே இல்லை என்கிற குற்றச்சாட்டுக்களையும் ஓடிடி ரசிகர்கள் வைத்து வருகின்றனர். இது தொடர்பான முழு விளக்கத்தையும் பார்த்திபன் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











