கணவரோட முதல் திருமண சர்ச்சை.. யாரோட பாஸ்ட்டையும் பத்தி பேசக் கூடாதுன்னு ஹன்சிகா கண்ணீர்!

சென்னை: நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ள அறிவிப்புடன் டீசரும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் யாருடைய பழைய வாழ்க்கை பற்றியும் தேவையில்லாமல் பேசக் கூடாது என பேசியபடியே ஹன்சிகா அழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சமீப காலமாக சினிமா நடிகைகள் தங்களின் திருமணத்தை வீடியோவாக எடுத்து ஓடிடி நிறுவனங்களுக்கு பெரும் தொகைக்கு விற்று வருகின்றனர்.

நெட்பிளிக்ஸில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வெகு நாட்கள் ஆகியும் இன்னமும் அந்த வீடியோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுடன் காதல்

சிம்புவுடன் காதல்

நடிகர் சிம்புவை நயன்தாரா காதலித்த நிலையில், பின்னர் அவரை பிரேக்கப் செய்து பிரிந்தார். பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்றதும் கடைசி நேரத்தில் நடைபெறாமல் போன நிலையில், கடைசியாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்டார். அதே போல நடிகை ஹன்சிகாவும் நடிகர் சிம்புவை காதலித்து வந்தார். ஆனால், அந்த காதலும் பிரேக்கப் ஆன நிலையில், தற்போது சோஹேல் கத்தூரியா எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார் ஹன்சிகா.

இரண்டாம் திருமணம்

இரண்டாம் திருமணம்

நடிகை ஹன்சிகாவுக்கு ஒரு பாஸ்ட் இருந்ததை போலவே சோஹேல் கத்தூரியாவும் 6 ஆண்டுகள் முன்னதாக ஹன்சிகாவின் தோழியை திருமணம் செய்திருந்த நிலையில், விவாகரத்து நடந்தது. அதன் பின்னர் தற்போது நடிகை ஹன்சிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்கிற தகவல்கள் வெளியான நிலையில், அதிகமான ட்ரோல்கள் கிளம்பின.

டிசம்பரில் திருமணம்

டிசம்பரில் திருமணம்

கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நடிகை ஹன்சிகா மோத்வானிக்கும் தொழிலதிபர் சோஹேல் கத்தூரியாவுக்கும் ஜெய்ப்பூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப்பெரிய அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்திய ஹன்சிகா விரைவில் திருமண வீடியோவையே ஓடிடியில் வெளியிட உள்ளார்.

ஓடிடியில் திருமண வீடியோ

ஓடிடியில் திருமண வீடியோ

நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என இதே போல டீசர் வெளியானது. ஆனால், இதுவரை அந்த திருமண வீடியோ வெளியாகவில்லை. ஆனால், ஹன்சிகாவின் திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் பிப்ரவரி 10ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு புதிய டீசருடன் வெளியாகி உள்ளது.

அழுகாச்சி டிராமா

அழுகாச்சி டிராமா

ஹன்சிகா மற்றும் சோஹேல் கத்தூரியாவின் ஜோடியின் திருமண வீடியோவுக்கு லவ் ஷாதி டிராமா என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், டீசரில் ஒரே அழுகாச்சி டிராமாவை போட்டு த்ரில்லிங்கான திருமண வீடியோவை ரசிகர்களுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறார் ஹன்சிகா.

பாஸ்ட் பத்தி பேசாதீங்க

பாஸ்ட் பத்தி பேசாதீங்க

மேலும், அந்த டீசரில் குறிப்பாக யாருடைய பாஸ்ட் பற்றியும் தப்பா பேசாதீங்க என நடிகை ஹன்சிகா பேசிவிட்டு கதறி அழும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சோஹேல் கத்தூரியாவின் முதல் மனைவி பற்றிய ட்ரோல்களுக்கு இந்த திருமண வீடியோ மூலம் ஹன்சிகா பதிலடி கொடுக்க காத்திருக்கிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X